நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 8, 2011

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை
எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும்
வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது
என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார்
அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும்
வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

இணையதள முகவரி : http://visualization.geblogs.com/visualization/appliances/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறியில்
இருந்து மடிக்கணினி வரை ஒவ்வொரு மின்சாதன பொருளும்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை அந்தந்த
பொருட்களை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம்
பயன்படுத்தாத மின்சாதன பொருட்களை ஒவ்வொன்றாக சொடுக்கி
நீக்கி விட்டு பயன்படுத்தும் பொருட்களின் மின்சார அளவு மொத்தமாக
என்ன என்பதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு மின்சாரத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நண்பர்களுக்கும்
இன்வெர்டர் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
உதவி செய்ய வேண்டும் என்று இறைவன் நினைத்து விட்டால்
ஏதாவது ஒரு வழியில் நமக்கு உதவி கிடைத்துவிடும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இராணுவ வீரர்களுக்கான சீருடை முதன் முதலில் எங்கு
 அறிமுகம் செய்யப்பட்டது ?
2.கணக்கிடும் எந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.அக்பர் அவையில் இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் யார் ?
4.மனிதனைப்போலவே கனவு கானும் மிருகம் எது ?
5.பைபிளின் முதல் ஆங்கிலப்பதிப்பை வெளியீட்டவர் யார்  ?
6.தங்கநிற வர்ணங்கள் எதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது ?
7.தமிழகத்தில் அதிக அளவு உள்ள மண் எது ?
8.ஒரே சாலையில் 19 தியேட்டர்கள் உள்ள நகரம் எது ?
9.உலகிலேயே அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நாடு எது ?
10.விமானப்படையை கொண்டாடும் நாள் ?
பதில்கள்:
1.பிரிட்டன்,2.பாஸ்கெல்,3.தான்சேன்,4.நாய்,
5.முதலாம் ஜேம்ஸ், 6.அலுமினிய வெண்கலம்,
7.கரிசல் மண்,8.பெங்களூர்.9.அமெரிக்கா, 10.அக்டோபர் 8.



இன்று ஜனவரி 9 
பெயர் : ஹர் கோவிந்த் குரானா ,
பிறந்த தேதி : ஜனவரி 9, 1922
ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல்
அறிவியலாளர். மரபுக் குறியம் (genetic code)
பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி
செய்வதில்
அவற்றின் பங்கு குறித்தும் அவர்
ஆற்றிய ஆராய்விற்காக
1968ஆம் ஆண்டு மருத்துவம்
அல்லது உடலிங்கியல்
துறையில் நோபல் பரிசினை
மார்சல் நோரென்பர்க்,
இராபர்ட் ஹாலி ஆகியோருடன்
பகிர்ந்து பெற்றவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

  1. நான் இதை நீண்ட நாட்களாக தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இணையத்தில் வழியுண்டு என தெரிவித்ததற்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  2. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. payanulla pathivu anna
    mikka nanri

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே கண்டிப்பாக இது அனைவருக்கும் உதவியாய் இருக்கும்

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  5. @ shareef
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. @ மாணவன்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad