டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4805" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான
ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க
வேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம்
இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.keybr.com
இந்தத் தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி டைப்ரைட்டிங்
கீபோர்டு தெரியும் இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும்
கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக
மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான் தினமும்
சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம்
கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம், முதலில்
வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள்
செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம்.
தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
நன்றியை மறந்தவனுக்கும் ஒநாய்க்கும் எந்த
வித்தியாசமும் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இராஜேந்திரபிரசாத் தலைமையில் எந்தசபை டெல்லியில்
கூடியது ?
2.வரைதிட்டக் குழவின் தலைவர் யார் ?
3.வரைவுசட்டமாவதற்கு யாரிடம் கையொப்பம் பெற வேண்டும்?
4.ஆளுநரின் பதிவிக்காலம் எவ்வளவு ?
5.மத்திய மாநிலஅரசுக்குள்ள பொதுவான அதிகாரங்கள் எத்தனை?
6.உறுப்பினர்கள் இரகசிய வாக்கு முறையில் அளிக்கும்
வாக்குகளுக்கு என்ன பெயர் ?
7.மக்களின் வாழ்க்கைத்தரம் எந்தத் திட்டங்கள் மூலம்
உயர்த்தப்பட்டது ?
8.தீண்டாமையை கடுமையாக தடைசெய்வது எத்தனையாவது விதி?
9.உடனடி நடவடிக்கை எடுக்க அவசரச்சட்டங்களை பிறப்பிக்கலாம்
என்று எந்தப்பிரிவு கூறுகிறது ?
10.பாரளுமன்றத்தை கூட்டவும் ஒத்திவைக்கவும் யாருக்கு அதிகாரம்
உண்டு ?
பதில்கள்:
1.நிர்ணயச்சபை, 2.டாக்டர் அம்பேத்கார்,3.குடியரசுத்தலைவர்,
4.5 ஆண்டுகள், 5.47 வகைகள், 6.ஒற்றை மாற்று வாக்கு,
7.ஐந்தாண்டு திட்டங்கள்,8.அரசியலமைப்பின் 17 வது விதி,
9.123 வது பிரிவு, 10. குடியரசுத்தலைவர்.
இன்று ஜனவரி 26
பெயர் : எட்வர்ட் ஜென்னர்,
மறைந்த தேதி : ஜனவரி 26, 1823
இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஆவார்.இள
வயது முதலே இயற்கை குறித்தும் தன்
சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில்
ஆர்வமுடன் இருந்தார். அம்மை நோய்க்கு
தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அனைவராலும்
அறியப்படுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
எனக்கு மிக உபயோகமான பதிவு.நன்றி.
ReplyDelete@ புலிக்குட்டி
ReplyDeleteமிக்க நன்றி
இது போல் தமிழ் தட்டச்சு பயில எதாவது இனைய தளம் உள்ளதா ?
ReplyDeleteநன்றி வின்மணி
@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteதமிழில் இதுபோல் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறோம் , எதற்கும் தேடிப்பார்த்து தெரியப்படுத்துகிறோம் , தினமும் 10 தளங்களுக்கு சென்று பின்னோட்டம் கொடுத்தாலே தமிழ் நன்றாக வரும் :)
மிக்க நன்றி.
romba thanks
ReplyDeletenaan typing kadhukka cd vaangalamaa
entru ninaithuk kondu irunthen.