நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, January 29, 2011

நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.

என்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப
வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து
இருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ
வளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில்
நம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4846" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல்
பலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்
என்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி :  http://www.bureauofcommunication.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த விதமான
Stationary Form  நமக்கு தேவையோ  அதை சொடுக்கி எளிதாக
தரவிரக்கி விடுபட்ட இடங்களை நிரப்பி நம் Communication -ஐ
வளர்க்கலாம்,  Observance of Holiday, Airing of Grievance, Statement
of Gratitude, Official Invitation, and Acknowledgment of Occasion
இன்னும் பலவிதமான Form -கள் இங்கு இலவசமாக கிடைக்கின்றன
அவரசக்கடிதம் முதல் முக்கிய கடிதம் வரை எப்படி இருக்க வேண்டும்
என்று சொல்லும் இந்த்தளத்தில் செல்ல எந்த பயனாளர் கணக்கும்
தேவையில்லை. கண்டிப்பாக இந்ததளம் நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
இறைவன் அதிகமான தோல்விகளை மனிதனுக்கு கொடுத்து
அவனை பக்குவப்படுத்தி பெரிய வெற்றிக்கு தயார்படுத்துகிறான்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகச்சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
2.சர்வதேச குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
3.தியாகிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
4.உலக ஊனமுற்றோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
5.தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
6.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
7.உலகத்தொழிலார்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
8.சர்வதேசப் பெண்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
9.காமன்வெல்த் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
10.இரானுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பதில்கள்:
1.ஏப்ரல் 7, 2.ஜூன் 1,3.ஜனவரி 30,4.மார்ச் 15,
5.மே 13,6.ஜனவரி,7. மே 1,8.மார்ச் 8.
9.மே 24, 10.ஜனவரி 21.இன்று ஜனவரி 29
பெயர் : பி.எஸ்.பி.பொன்னுசாமி,
மறைந்ததேதி : ஜனவரி 29, 1998
இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது
அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை
ஏற்று,பல்வேறு இன்னல்களை அனுபவித்து,
பல பங்களிப்புகள் தந்து,வெளி உலகுக்குப்
பரவலாகத் தெரியாமல் மறைந்த விடுதலைப் போராட்டத்
தியாகிகளில் ஒருவர் தான் இந்த பி.எஸ்.பி.பொன்னுசாமி.
நன்றி...என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

 1. ரொம்ப நல்லாயிருக்கு, நன்றி சார்!

  ReplyDelete
 2. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. மிக பயனுள்ள தகவல்...

  ReplyDelete
 4. @ முத்துவேல்
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. எங்கிருந்துதான் இந்த தகவல்களை பெறுகிறீர்களோ தெரியாது.மிக அருமை ஐயா உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

  ReplyDelete
 6. @ sureshbabuvinitulaa
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. தர்மா, யாழ்ப்பாணம்February 11, 2011 at 2:39 AM

  All the Best My FRIEND

  ReplyDelete
 8. @ தர்மா
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad