இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, April 28, 2010

இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி

இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்
சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.

[caption id="attachment_1836" align="aligncenter" width="380" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1837" align="aligncenter" width="352" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_1838" align="aligncenter" width="455" caption="படம் 3"][/caption]

[caption id="attachment_1839" align="aligncenter" width="401" caption="படம் 4"][/caption]

இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது வேகம் இல்லை என்று கூறும்
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம்.  முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run  என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart  செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.
வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
 நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?

பதில்கள்:
1.1964,2.  தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து

இன்று ஏப்ரல் 28
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.


PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

68 comments:

 1. தாமஸ் ரூபன்April 29, 2010 at 12:01 AM

  தூங்குபவனை கூட எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிபவர்களை எழுப்ப முடியாது என்று சொல்வார்கள் .B.S.N.L இண்டெர்நெட் இணைப்பின் வேகம்மும் அதேப்போல்தான் (தூங்குவது போல் நடிபது )அதை அதிகரிக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்.

  பதிவுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 2. //அதில் இருக்கும் Bandwidth என்பதில்
  22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
  அடுத்து கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்போது உங்கள்
  கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
  அதிகரிக்கப்பட்டிருக்கும்.//

  இதை தாங்கள் பயன்படுத்தி பார்த்தீர்களா?
  அல்லது படித்த செய்தி மட்டுமா?

  (1. Bandwidth = 22 ?
  2. கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் "இரண்டு மடங்காக"
  அதிகரிக்கப்பட்டிருக்கும் ?)
  இவை சரிதானா.

  ReplyDelete
 3. for mail follow ups

  ReplyDelete
 4. http://en.wikipedia.org/wiki/U._V._Swaminatha_Iyer

  ReplyDelete
 5. @ winmani பயன்படுத்தி பாருங்கள் வேகமாக தான் இருக்கும்

  ReplyDelete
 6. @Rajasurian
  நாம் பயன்படுத்தி பார்த்தபின் தான் சொல்கிறோம்

  ReplyDelete
 7. Default Reservable bandwidth - 20%. நாம் இதை 0-க்கு மாற்றினால் அது நம் இணைய வேகத்தை ஓரளவிற்கு கூட்டும்(reserved bandwidth-ஐயும் நாம் உபயோகிக்க ஆரம்பிப்பதால்).

  ஆனால் 22 க்கு மாற்றுவதன் லாஜிக் புரியவில்லையே.
  (உங்கள் tips எப்போதும் சரியாகவே இருக்கும். என் ஐயத்தை தெளிவுபடுத்துவீர்களா?)

  ReplyDelete
 8. vista vil eppadi seyal paduthuvathu,neengal kuriya murai vistavil velai seiya villai

  ReplyDelete
 9. @ Rajasurian

  நண்பருக்கு ,
  இண்டெர்நெட் இணைப்பு குறைவாக உள்ள நேரத்தில் நாம் Default reservable bandwidth என்பதை 22 %
  மாற்றுவதன் மூலம் சர்வர் அதாவது Domain -ல் கிடைக்கும் இணைப்பு வேகத்தை முழுமையாக
  (இரட்டிப்பாக) கொடுக்கும். என்பதற்க்காக தான் 22% என்று மாற்றியுள்ளேம். பயன்படுத்தி பாருங்கள்.

  மிக்க நன்றி

  ReplyDelete
 10. @shivany
  பயன்படுத்தி பாருங்கள்.உண்மை புரியும்

  ReplyDelete
 11. super wow.... thanks winamni
  i feel my system internet speed increase.

  ReplyDelete
 12. @ saravanan
  நண்பருக்கு windows-xp-ல் மட்டும் தான் சோதித்து பார்த்திருக்கிறோம்
  vista -வில் இண்டெர்நெட் வேகபடுத்துவதை விரைவில் தெரியப்படுத்துகிறோம்

  ReplyDelete
 13. விளக்கத்திற்கு நன்றி

  ReplyDelete
 14. நான் AirTel Brodband இண்டெர்நெட் பயன்படுத்துகிறேன் முதலில் நம்பவில்லை ஆனால் சும்மாதான் செய்துபார்த்தேன் நல்லாதான் இருக்கு மிக்க நன்றிங்கோ.....
  அமுதா வெங்கடேசன்

  ReplyDelete
 15. மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறது சார், உண்மையிலேயே வழமையை விட வேகமாகத்தான் இருக்கிறது. ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 16. @அமுதா நன்றி

  ReplyDelete
 17. நான் ட்ரை பண்ணினேன், குருப் பாலிசிகுள்லயே போகல!

  ReplyDelete
 18. @ வால்பையன் நன்றி
  win xp ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்துக்கு மட்டும் தான் இபோது கொடுத்திருப்பது
  பொருந்தும்

  ReplyDelete
 19. ithai neengal muthalil solie irukkalam ..... nan windows 7 use panugiren... palan 00000000

  nandri

  ReplyDelete
 20. I UNDERSTAND THAT IT AFFECTS ONLY LAN TRAFFIC AND NOT INTERNET SPEEDS. ALSO WILL IT WORK IF QOS SCHEDULER IS NOT SUPPORTED? I AM NOT A TECHNICAL PERSON , BUT THIS IS WHAT I GATHERED FROM THE INTERNET .

  ReplyDelete
 21. @LVISS நண்பருக்கு,

  உங்கள் ஆர்வத்தை முதலில் பாராட்டுகிறோம். முதலில் QoS என்பது Quality of Service
  Packet Scheduler என்பது தகவல்களை சிறிய பாக்கெட் ஆக பிரித்து LAN, WAN, MAN எல்லாவற்றிலும் எப்ப அனுப்ப வேண்டும் அதன் வேகம் என பல தகவல்களை அது
  வைத்திருக்கும். இதில் நாம் பயன்படுத்தும் 22% என்பது விண்டோஸ் -ன் அவசரமாக
  தகவல்களை அனுப்ப கொடுக்கப்பட்டிருக்கும் default Value அதாவது இதற்க்கு மட்டும்
  அதிக முக்கியத்துவம் (High Priority ) கொடுக்கப்பட்ட்டு தகவல்களை வேகமாக அனுப்ப
  உதவும். விரைவில் நேரம் கிடைத்தால் இதைப்பற்றி விரிவான பதிவு ஒன்றை இடுகிறோம்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 22. மிகவும் உபயோகமான தகவல். நான் இதை என்னுடய நிறுவிய மடிக்கணிணியில் முயற்சிதேன். அது சரியாகவும் வேலை செய்கிறது.
  நன்றி,
  இவண்.

  ReplyDelete
 23. @ Ivan மிக்க நன்றி

  ReplyDelete
 24. how to use windows 7

  ReplyDelete
 25. After Network, I am not getting QoS Packet Scheduler. Please advise.

  ReplyDelete
 26. எந்த operating system என்று சொல்லவில்லையே கேள்விகளை இன்னும் முழுமையாக கேளுங்கள்..

  ReplyDelete
 27. முஹம்மது நியாஜ்May 2, 2010 at 9:36 AM

  Gpedit.msc என்று டைப் செய்தால கீழ் கண்ட் error தான் வருகின்றது எதனால். windows Could not find. try again.
  நான் பயன்படுத்துவது Windows XP Home premieum Service pack2.
  தயவு செய்து விளக்கம் தரவும்
  என்றும் அன்புடன்
  முஹம்மது நியாஜ்
  கோலாலம்பூர்

  ReplyDelete
 28. @ முஹம்மது நியாஜ்
  மறுபடியும் இரண்டு முறை முயற்ச்சித்து பாருங்கள் கண்டிப்பாக வேலைசெய்யும் ,
  நீங்கள் பயன்படுத்தும் கணினியில் ஏதாவது - Firewall மென்பொருள் இதை பயன்படுத்த
  முடியாமல் சில நேரங்களில் தடுக்கலாம் அப்ப்டி ஏதாவது Firewall மென்பொருள் இருந்தால் அதை சிறிது நேரம் மூடிவிட்டு முயற்ச்சிக்கவும்.

  நன்றி

  ReplyDelete
 29. @winmani

  winXP Home Edition-ல் Group Policy Editor இல்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 30. Im using Windows XP home edition. the gpedit.msc is not executable. returns some error messages. i tried to turn off the firewall setting. still getting the same error message. anything i can do about this?

  ReplyDelete
 31. Hi

  I have tried too many times with turn off fire wall and anti-virus, restart but the same error coming

  what can I do ? Please advise through my email.

  Renga

  ReplyDelete
 32. @ Rajasurian
  Yes, XP - Professional ல் பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 33. @ samyrenuga
  நண்பருக்கு Windows XP home edition -ல் பயனபடுத்தமுடியாது.XP – Professional ல் பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 34. @ renga
  Windows XP home edition -ல் பயனபடுத்தமுடியாது.XP – Professional ல் பயன்படுத்தலாம்.

  ReplyDelete
 35. திரு வின்மணி,
  கணினியை reformat செய்யாமல் C , D driveகளின் அளவில் மாற்றம் செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 36. @ தணிகாசலம்
  Strat -> Control panel -> Administrative tools ->Computer Management -> Storage
  -> Disk management இப்போது உங்கள் திரையின் வலதுபக்கத்தில் இரண்டு டிரைவு-ம்
  தெரியவரும் அதன் அளவை உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளுங்கள்.

  நன்றி

  ReplyDelete
 37. மிக்க நன்றி. முயன்று பயனடைந்த பிறகு முடிவினைத் தெரிவிக்கிறேன்.

  அன்புடன்,
  தணிகாசலம்

  ReplyDelete
 38. @ தணிகாசலம்
  மிக்க நன்றி

  ReplyDelete
 39. நன்றி..வேகம் கூடி உள்ளது.

  உங்களின் ஆண்டிவைரஸ் உபயோகிக்கிறேன்.
  அப்டேஷன் வந்துள்ளதா?


  தகவல் சொல்லவும்.

  ReplyDelete
 40. @ ravi
  மிக்க நன்றி நண்பரே விரைவில் வெளிவரும் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்.

  ReplyDelete
 41. nan sri lanka vila irukiran ninka sonnamathiri sythuparthen but muthalla iruntha mathiri thne iruukku?why?

  ReplyDelete
 42. @ gowritharan

  நீங்கள் என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறீர்கள் ?

  ReplyDelete
 43. திரு வின்மணி,

  மிக்க நன்றி. என்னுடைய மடிக்கனிணியில் XP Pro வில் உங்களுடைய பதிவுப்படி வேகத்தை கூட்ட முடிந்தது. இது window 7 இல் சத்தியப்படுமா?
  22க்குப் பதில் இன்னும் பெரிய எண்ணைத் தட்டலாமா?

  தணிகாசலம் ,
  மலேசியா.

  ReplyDelete
 44. @ தணிகாசலம்
  மிக்க நன்றி , விண்டோஸ் 7-ல் இது பொருந்தாது. விண்டோஸ் 7 இல் எப்படி வேகத்தை கூட்டலாம் என்பதை விரைவில் ஒரு பதிவாக வெளியீடுகிறோம்.

  ReplyDelete
 45. SORRY I AM STILL ON THIS SUBJECT . DO SEARCH ENGINES HAVE ANYTHING TO DO WITH SPEEDY BROWSING. WILL IT WORK IF THE SEARCH ENGINE IS CHANGED . A PARTICULAR SEARCH ENGINE MAY HAVE MORE TRAFFIC THAN A LESSER KNOWN S.E WHICH MAY SLOW DOWN THE SEARCHING SPEED.

  ReplyDelete
 46. @ LVISS
  நாம் பயன்படுத்தும் இணைய உலாவி ஒபேரா மற்றும் தேடுபொறி என்றால் கண்டிப்பாக கூகுள் தான். இன்னும் சந்தேகம் தீரவில்லையா ?
  நன்றி

  ReplyDelete
 47. மிக்க நன்றி . இந்த வழிமுறைகளுக்கு பின் இன்டர்நெட் வேகம் அதிகரித்துள்ளது . உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. @ selva
  மிக்க நன்றி

  ReplyDelete
 49. Keep it up your services. i pray this kind of tamil sites should reach the NAIVE USERS

  ReplyDelete
 50. Thanks for the useful info.

  ReplyDelete
 51. மணிமொழிMay 23, 2010 at 8:35 PM

  என்னுடைய கணணியில் cpedit.msc என்று type செய்தவுடன் window cant find என்று வருகிறது.
  pls help me.

  மணிமொழி

  ReplyDelete
 52. @ மணிமொழி
  தோழிக்கு cpedit.msc அல்ல Gpedit.msc என்று கொடுங்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 53. when i click administrative templates i can't find "network".please help me.my operating system is windows xp professional, version3,service pack 3.(i am using wireless connection)

  ReplyDelete
 54. @ shafeeka
  அன்புள்ள தோழிக்கு ,
  பின் வரும் வழிமுறையை பயன்படுத்தி பாருங்கள்.
  1.Start -> Run -> Gpedit.msc
  2.Extend to Computer Configuration -> Administrative Templates
  3.Right click Administrative Templates, select Add/Remove Templates
  4.If system in the list, please remove it. Close
  5.Right click Administrative Templates again, select Add/Remove Templates
  6. Click Add button, select C:\WINDOWS\inf\system.adm. Close

  நன்றி

  ReplyDelete
 55. thank you very much for your responds.but after network i cant find Qos packet scheduler. plz help me again.

  ReplyDelete
 56. @ shafeeka
  உங்கள் கணினியின் நெட்வொர்க் கார்ட் ( LAN Driver ) install
  பண்ணுங்க.
  நன்றி

  ReplyDelete
 57. thank you very much.it's working.

  ReplyDelete
 58. usful info thank you sir

  ReplyDelete
 59. i click start battan but no work than how to get

  ReplyDelete
 60. @ mohanraj
  உங்கள் ஆப்ரேட்டிங் பற்றி சொல்லுங்கள்.
  நன்றி

  ReplyDelete
 61. நண்பரே!!!

  எனக்கு இதில் சந்தேகம் இல்லை. என்னுடைய கேள்வி....நாம் தினந்தோறும் பல வலைப்பக்கங்களை பார்த்து வருகிறோம்..ஆனால் ஒரு சில வலைப்பக்கங்களை (தினத்தந்தி) பார்க்கும் போது எரிச்சலூட்டும் வகையில் pop up window, ads தோன்றும். இதை தடுக்க browser லிலே வழி இருந்தாலும் பயன் இல்லை. நான் சில தினங்களுக்கு முன் adguard என்ற மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன்....அருமையான மென்பொருள்..ஆனால் இது இலவசம் இல்லை. இந்த மென்பொருளின் registration code crack அல்லது வேறு நல்ல மென்பொருளை பற்றி கூறவும்...

  நன்றி..வணக்கம்

  ReplyDelete

Post Top Ad