அடையாள அட்டை என்ற ஒன்று தற்போது முக்கியனமான ஒன்றாக
மாறி வருகிறது இந்த அடையாள அட்டையை எளிதாக நாமே
வடிவமைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சாதாரனமாக கணினி பயன்படுபத்துபவர்களையும் கணினி மேதைகள்
ஆக்க வேண்டும் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு தான்
வின்மணி பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த
வகையில் இன்று எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும்
சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள
அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bighugelabs.com/badge.php
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் நிறுவனத்தின் பெயர், எந்த
வண்ணத்தில் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதையும்
மற்றும் இதரத் தகவல்களை கொடுத்து Create என்ற பொத்தானை
சொடுக்கி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் அடையாள அட்டை
உருவாக்கலாம்.அடையாள அட்டை உருவாக்க்க விரும்பும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நல்ல வேலைக்காரன் ஒரு நிறுவனத்திற்கு கிடைப்பது அதிர்ஷ்டம்,
அடிக்கடி இடம் மாறும் வேலைகாரனிடம் திறமை இருக்காது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரிகர் யார் ?
2.எண்வழி மார்க்கத்தை விளக்கிக் கூறியவர் யார் ?
3.இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ?
4.ஆரியர்களின் பூர்விக இடம் எது ?
5.நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மன்னர்களால்
தோற்றுவிக்கப்பட்டது ?
6.நவரத்தினங்கள் என்று கூறுவது எந்த அரசுக்குரியது ?
7.எந்த நாகரிக காலத்தில் தெருவிளக்குகள் போடப்பட்டது ?
8.குடியரசுத்தலைவரின் பதிவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ?
9.வங்காள நீதித்துறை சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
10.ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?
பதில்கள்:
1.பாகியான்,2.புத்தர்,3.1556,4.மத்திய ஆசியா, 5.மெளகாரி,
6.குப்த அரசு, 7.சிந்துவெளி,8.5 ஆண்டுகள்.9.1781, 10.1773.
இன்று ஜனவரி 24
பெயர் : ஓமி யெகாங்கிர் பாபா,
மறைந்த தேதி : ஜனவரி 24, 1966
இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கியப்
பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர்.
1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற
ஜெர்மானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த
அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத்
தந்தது.ஓமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Nice One!
ReplyDeleteஅடையாள அட்டை நானும் உருவாக்கினேன்.
ReplyDeleteThanks winmani
ReplyDelete@ எஸ். கே
ReplyDeleteமிக்க நன்றி
@ jiyathahamed
ReplyDeleteமிக்க நன்றி
@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
passport size photo making soft ware is required .
ReplyDeletePl help
M.murali
tamil
ReplyDeleteAn attention-grabbing dialogue is price comment. I feel that it is best to write extra on this topic, it might not be a taboo topic however generally persons are not enough to talk on such topics. To the next. Cheers
ReplyDelete