யூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, November 1, 2010

யூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.

யூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து
ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள்
இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இருந்து ஆடியோவை
மட்டும் தனியாக ஒரே சொடுக்கில் எளிதாக பிரிக்கலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3833" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

நாளும் புதுப்புது இணையதளங்கள் யூடியூப்-ஐ மையமாக வைத்து
யூடியுப் வீடியோவை வேறு பார்மட்டுக்கு மாற்ற , ஆடியோவை
தனியாக பிரிக்க என்று தினமும் வந்து கொண்டே இருக்கின்றன
அந்த வரிசையில் இன்று புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது.

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

[caption id="attachment_3834" align="aligncenter" width="319" caption="படம் 2"][/caption]

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Enter YouTube URL:
என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் ஆடியோவாக
மாற்ற வேண்டிய யூடியூப் முகவரியை கொடுக்கவும் அதற்கு
அடுத்து குவாலிட்டி ( Standard Quality ) ( High Quality) எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுக்கொண்டு Go என்ற பொத்தானை அழுத்தவும்.
அடுத்து வரும் திரையில் Download MP3 என்ற எழுத்தை சொடுக்கவும்
அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. இதில் இருக்கும்
Download MP3 என்ற பொத்தானை சொடுக்கி MP3 ஆக நம்
கணினியில் சேமிக்கலாம்.  மற்றதளங்களை விட இந்ததளத்தில்
ஆடியோ குவாலிட்டியை தேர்ந்தெடுக்கும் ஆப்சன் உள்ளது.
கூடவே MP3 தரவிரக்கும் முன் Preview -ம் பார்த்துக்கொள்ளலாம்.
யூடியூப் வீடியோவை வேறுபார்மட்டுக்கு மாற்ற விரும்பும் நண்பர்கள்
இந்தப்பதிவை பார்க்கவும்.

http://winmani.wordpress.com/2010/10/04/youtubedirectdownload/


வின்மணி சிந்தனை
ஞானம் பேசுவதற்கு வயது ஒரு தடையில்லை , அனுபவமும்
பிறவி ஞானமும் போதும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.லெனின் நடத்திவந்த பத்திரிகையின் பெயர் என்ன ?
2.தண்ணீருக்கு வெளியேயும் வாழக்கூடிய மீனினம் எது ?
3.காற்றில் நைட்ரஜனின் பங்கீடு எவ்வளவு ?
4.உலகின் பணிப்பெண் என்ற சிறப்புப் பெயர் கொண்ட நாடு எது?
5.ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை யார் ?
6.ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்துவது எது ?
7.முதன் முதலில் இந்தியாவில் காப்பிசெடி எங்கு
வளர்க்கப்பட்டது?
8.உலகின் மிகப்பெரிய அனை எது ?
9.யுகங்களில் க்ருதயூகம் எனப்படுவது எத்தனையாவது யுகம்?
10.உலக விமான தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
பதில்கள்:
1.இஸ்கரா, 2.மேடக்,3.80 சதவீதம், 4.கனடா,
5.ஹானிமேன், 6.ஹைட்ரஜன், 7.சிக்மகளூர்,
8.போர்ட் பீக்,9.முதல் யூகம்.10.ஏப்ரல் 12


இன்று நவம்பர் 1 
பெயர் : ஐஸ்வர்யா ராய் ,
பிறந்த தேதி : நவம்பர் 1 , 1973
பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக
அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி,
தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில்
நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர்
படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத்
திருமணம் செய்துள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. அசத்தல் மணி. ரொம்ப பயன்

    ReplyDelete
  2. மிகவும் குளிர்ந்த

    ReplyDelete
  3. பெரிய கட்டுரை!

    ReplyDelete

Post Top Ad