ஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்
பயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது
சரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில
வார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக
புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்
போதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று
உதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்
நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wordspy.com
இந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில
வார்த்தைகளை கற்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய
விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற
கட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை
கொடுத்து தேடலாம். Alphaphetic வரிசையிலும் நாம் புதிய
வார்த்தையை தேடலாம். புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில
வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல்
தகவலும் இருக்கும். குழந்தைகளுக்கும் ஆங்கில அறிவை வளர்க்க
விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
வார்த்தையால் அடுத்தவர்களை தீ போல் சுடுபவர்களை
இறைவன் ஒரு போதும் மன்னிப்பதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ரக்பி ஆட்டத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது என்ன ?
3.இசைக்கலைஞர் தான்சேனை ஆதரித்தவர் யார் ?
4.குடைவரைக் கோவில்களை முதலில் கட்டிய மன்னன் யார் ?
5.ஆளுநரின் பதிவிக்காலம் எவ்வளவு ?
6.கிளியோபாட்ரா எந்த நாட்டின் இளவரசி ?
7.டெல்லி சலோ என்று முழங்கியவர் யார் ?
8.ராமானுஜரின் கோட்பாடு என்ன ?
9.சாக்லேட் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.வியட்நாமின் தலைநகரம் எது ?
பதில்கள்:
1.வில்லியம் வெப்எல்லிங், 2.65,3.அக்பர்,
4.மகேந்திரவர்மன்,5.5 ஆண்டுகள், 6.எகிப்து, 7.நேதாஜி,
8.துவைதம்,9.கொக்கோ விதைகளில் இருந்து.10.ஹனோய்
இன்று அக்டோபர் 31
பெயர் : சர்தார் வல்லப்பாய் படேல் ,
பிறந்த தேதி : அக்டோபர் 31, 1875
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். குஜராத்
மாநிலத்தில் பிறந்து அம்மாநிலத்திலே
வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு
எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக
இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று
அழைக்கப்படுகிறார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
நான் ஒவ்வொரு நாளும் தவறாமல் படிக்கும் வலைப்பூவில் வின்மணி முதன்மையானது. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்
ReplyDelete@ அங்கிதா வர்மா
ReplyDeleteஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி
good one.
ReplyDeletepllease visit here also
http://tamiltospokenenglish.blogspot.com/2010/11/daily-tips-10.html
super padhivu...
ReplyDeleteThanks winmani
ReplyDeleteஎனக்கு ரொம்ப நன்றாக உதவியது.
ReplyDelete@ sunitha
ReplyDeleteமிக்க நன்றி , பயனுள்ள தளம் வாழ்த்துக்கள்.
@ Ravi kumar
ReplyDeleteமிக்க நன்றி
@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
@ jiyath
ReplyDeleteநன்றி