குவாலிட்டியாக தரவிரக்க உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
வீடுகளின் சுவருக்கு பெயிண்ட் செய்வதில் தொடங்கி 3D கிராபிகஸ்
வரை அனைத்துக்கும் பயன்படும் வகையில் உள்ள Texture படங்களை
மிகத்துல்லியமாக தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.textureking.com
போட்டோஷாப் Background உருவாக்க மட்டும் அல்லாமல் பல
விதமான போட்டோ வேலைகளுக்கும் நாம் பயன்படுத்துவது
Texture என்று சொல்லக்கூடிய இந்த படங்களை தான்.Texture
படங்களை கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் இந்தத்தளத்தின்
மூலம் நாம் ஒவ்வொரு துறை வாரியாக பல விதமான texture
படங்களை குவாலிட்டியுடன் தரவிரக்க முடியும். போஸ்டர்
செய்வதில் பயன்படுத்தப்படும் Texture முதல் பனியனில்
பயன்படுத்தப்படும் texture வரை அனைத்தையும் எளிதாக
தரவிரக்கலாம்.ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட
குவாலிட்டியான texture இந்ததளம் மூலம் தரவிரக்கலாம்.
வின்மணி சிந்தனை
அடுத்தவர் படும் துன்பத்துக்கு மனம் இரங்கினால் தனக்கு
ஒரு போதும் துன்பம் மனதால் வருவதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பெரியபுராணத்தை எழுதியவர் யார் ?
2.தேனீக்கள் எந்த பேரினத்தை சேர்ந்தவை ?
3.இந்தியாவின் தலைமை வங்கி எது ?
4.மனிதர்களின் விலா எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
5.காற்றில் தீப்பிடிக்கும் உலோகம் எது ?
6.முதன் முதலில் புத்தகம் எந்த நாட்டில் அச்சிடப்பட்டது ?
7.உலக எழுத்தறிவு ஆண்டு எது ?
8.உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் எது ?
9.கண் தெரியாமல் வாழ்ந்த ஆங்கில கவிஞர் யார் ?
10.மனிதனின் உடலின் எத்தனை எலும்புகள் உள்ளது ?
பதில்கள்:
1.சேக்கிழார்,2.ஏபிஸ்,3.ரிசர்வ் வங்கி,4.24,
5.பாஸ்பரஸ், 6.சீனா,7.1990, 8.அலுமினியம்.
9.ஜான்மில்டன், 10.208.
இன்று ஜனவரி 10
பெயர் :ஆனந்த ரங்கம் ,
மறைந்த தேதி : ஜனவரி 10, 1761
முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்
இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர்.
24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்
நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்
கழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள்
தமிழ் சேவைக்கு நன்றி.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
7.பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத நாடு எது ?
ReplyDelete7.பிரான்ஸ்.
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பல குடும்பங்கள் புதுவையில் பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு இங்கு இருந்து வாக்கு அளிக்கின்றனர் இதில் அதிக வாக்காளர்கள் பெண்களே.
அதுபோல் இவர்கள் பிரான்ஸில் வசித்தாலும் இவர்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமை உண்டு.
நன்றி வின்மணி.
@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteநண்பருக்கு ,
புத்தகங்களில் இருந்து தொகுத்து தான் நாம் கொடுக்கிறோம். சில பதில்கள் நமக்கு தவறாக தெரிந்தாலும் புத்தகத்தில் இருப்பது தான் அரசாங்க ஏட்டிலும் இருக்கும் என்பதால் தெரியப்படுத்துகிறோம். நீங்கள் கூறியதனால் அந்த கேள்வியை நீக்கி மற்றுமொறு கேள்வியை கொடுத்திருக்கிறோம்.
மிக்க நன்றி
வணக்கம்,
ReplyDeleteவின்மணி சிந்தனையில் "மனம் இரங்கினால்" என்று வரும் என்று நினைக்கிறேன்
@ தர்மா
ReplyDeleteநண்பருக்கு திருத்தியாகிவிட்டது.
மிக்க நன்றி