ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, January 11, 2011

ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.

ஆங்கிலத்தை பொருத்தவரை ஒரே பொருளுக்கு பல வார்த்தைகள்
இருந்தாலும் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தையைத்தான்
இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு மாற்றாக
நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இணையான பொருள் உள்ள
வார்த்தையை நொடியில் தேடலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுபவரில் இருந்து கதை எழுதுபவர்கள்
வரை, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் கல்லூரி செல்லும்
இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் மேலும் பல
வார்த்தைகளை கற்றுகொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.ironicsans.com/thsrs/

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கு இணையான சிறிய வார்த்தை
வேண்டுமோ அதைக் கொடுத்து Look up என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த வார்த்தைக்கு
இணையாக உள்ள சிறிய வார்த்தைகளை பட்டியலிடும் இதில்
இருந்து நமக்குத் தேவையான வார்த்தையை நாம் எடுக்கலாம்.
ஆங்கிலம் கற்றவர்களுக்கும் புதிதாக ஆங்கிலம் கற்றுக்
கொண்டிருப்பவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
துன்பப்பட துன்பப்பட நம்மிடம் இருக்கும் பாவங்கள் குறைந்து
வருகிறது, அதனால் துன்பத்தை ஏற்றுக்கொள்வோம்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பித்த நீர்ப்பை இல்லாத ஒரே மிருகம் எது ?
2.முன்னும் பின்னும் பறக்கக்கூடிய பறவையினம் எது ?
3.டைனோசர் எந்த இனத்தைச் சார்ந்தது ?
4.எந்தப்பறவை பெரிய முட்டையிடும் ?
5.ஆமையின் வாழ்நாள் எவ்வளவு  ?
6.நீந்தத்தெரியாத மிருகம் எது ?
7.கண்கள் இருந்தும் பார்வை இல்லாத பிராணி எது ?
8.வெள்ளை ரத்தம் கொண்ட பிராணி எது ?
9.எட்டு மாதங்கள் தொடர்ந்து பறக்கும் பறவை ?
10.மிகவும் அதிக ஓசையை வெளியிடும் உயிரினம் எது ?
பதில்கள்:
1.ஒட்டகம்,2.ஹம்மிங் பேர்டு,3.பல்லி இனம்,4.நெருப்புக் கோழி,
5.400 வருடம், 6.ஒட்டகம்,7.வெளவால்,8.வெட்டுக்கிளி.
9.சூட்டிடெர்ன், 10.நீலத்திமிங்கலம்.



இன்று  ஜனவரி 11
பெயர் :
திருப்பூர் குமரன்,
மறைந்த தேதி :
 ஜனவரி 11,1932
சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
தொடங்கிய போது அறவழியில் சென்ற
குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
இந்திய தேசியக் கொடியை கையில்
வைத்துக்கொண்டே உயிர் துறந்தார். நம் நாடு இன்று
 உமக்காக தலை வணங்குகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

Post Top Ad