இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, January 12, 2011

இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.

நம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான
படங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக
பதிவேற்றலாம். நம்முடைய தளத்தில் படங்களை எங்கு
வேண்டுமோ அங்கு எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4663" align="aligncenter" width="417" caption="படம் 1"][/caption]

படங்களை பதிவேற்ற பல இணையதளங்கள் இருந்தாலும் சில
இணையதளங்களில் நாம் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள்
ஒரு சில நாட்களில் தானாகவே நீக்கப்பட்டுவிடும் இந்தப்
பிரச்சினையை சரிசெய்வதற்காவும், வேகமாக படங்களை
பதிவேற்றம் செய்வதற்கும் உதவியாக நமக்கு ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://fumpr.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் -1ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் படங்களை
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 5 படங்களை நாம்
இந்தத்தளத்தில் மூலம் இலவசமாக host செய்யலாம். எத்தனை
படங்களை Upload செய்ய வேண்டுமோ அத்தனையும் தேர்ந்தெடுத்து
கொண்டு Upload என்ற பொத்தானை அழுத்தி எளிதாக ஆன்லைன்
மூலம் சில நிமிடங்களில் பதிவேற்றம் செய்யலாம். அடுத்து வரும்
திரையில் நமக்கு ஒவ்வொரு படத்துக்கும் உள்ள Image url நமக்கு
கிடைக்கும் இதிலிருந்து image url முகவரியை காப்பி செய்து
நம் தளத்தில் எங்கு தேவையோ அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
image upload சேய்ய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
சில நேரங்களில் எதிர்பாறாமல் கிடைக்கும் வார்த்தைகள்
கூட நமக்கு இறைவன் காட்டிய வழியாக இருக்கும்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் வானவில் சாஸ்திரத்தின் முன்னோடி யார் ?
2.பாரதரத்னா விருது முதன் முதலில் யாருக்கு வழங்கப்பட்டது?
3.முதல் உலகப்போர் ஆரம்பமான தேதி எது ?
4.இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
5.இந்தியாவில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதல்
 குழந்தையின் பெயர் ?
6.அன்னை தெரசா பிறந்த நாடு எது ?
7.ஈரான் நாட்டில் ராணுவதின விழா எப்போது
கொண்டாடப்படுகிறது ?
8.பாரிசில் உள்ள ஈஃபில் டவரைக் கட்டியவர் யார் ?
9.இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி ?
10.நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
பதில்கள்:
1.ஆர்யப்பட்டா,2. ராஜாஜி,3.ஆகஸ்ட் 4 ,1914 ,
4.சமுத்திர குப்தர்,5.துர்கா, 6.அல்பேனியா,7.ஏப்ரல் 18,
8.குண்டல் ஈஃபில்.9.கிரண்பேடி, 10.இராஜாராம் மோகன்ராய்.இன்று ஜனவரி 12 
பெயர் : சுவாமி விவேகானந்தர் ,
பிறந்ததேதி : ஜனவரி 12 , 1863
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்,
நம் இந்திய தேசத்திற்காகவே வாழ்ந்து
காட்டியவர். 1893 ஆம் ஆண்டு அவர்
சிகாகோவின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. @ Speed Master
  மிக்க நன்றி

  ReplyDelete
 2. மிகவும் உபயோகமான பதிவு நன்றி..!! :)

  ReplyDelete
 3. உபயோகமான தகவல் கொடுத்தமைக்கு மிக நன்றி

  ReplyDelete
 4. @ Babu Natesan
  ஆம் மிகப்பெரிய நிறுவனத்தின் தளம் கூட வைரஸால் பாதிக்கப்படுகிறது , சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம் பார்க்கலாம்.
  நன்றி

  ReplyDelete

Post Top Ad