அழகான பவர்பாயிண்ட் ( Powerpoint Presentation) ஆன்லைன் மூலம் உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, January 13, 2011

அழகான பவர்பாயிண்ட் ( Powerpoint Presentation) ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

அலுவலக வேலைகள் முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரை
அனைத்தையுமே தற்போது அழகான பவர்பாயிண்ட் பிரசண்டேசனாக
உருவாக்கி அனைவரிடமும் காண்பிப்போம் ஆனால் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் இது சாத்தியமா என்றால்
சாத்தியம் தான் ஆம் ஆன்லைன் மூலம் 280-க்கும் மேற்பட்ட
பவர்பாயிண்ட் டிசைனில் இலவசமாகவே உருவாக்கலாம்
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



ஆன்லைன் மூலம் பவர்பாயிண்ட் presentation எளிதாக அதுவும் சில
நிமிடங்களில்  நமக்கு பிடித்த டிசைனில் எளிதாக உருவாக்கலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://280slides.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Try it Now ,Free என்ற
பொத்தானை சொடுக்கி தொடங்கலாம் அடுத்து வரும் திரையில்
எளிதாக நமக்கு தேவையான Slide மற்றும் Background மற்றும்
Slide போன்றவற்றை எளிதாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பவர்பாயிண்ட் பிரண்டேசன் உருவாக்கி முடித்ததும் அதை நம்
கணினியில் சேமித்தும் வைக்கலாம். ஆன்லைன் மூலம் எளிதாக
நண்பர்கள் மற்றும் Group -களிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில்
உள்ள மேலும் சிறப்பம்சம் என்ன வென்றால் நாம் உருவாக்கும்
பவர்பாயிண்ட் பிரசேண்டேசனை உலாவி மூலம் இயக்கி பார்க்கும்
வசதியும் இருக்கிறது. மாணவர்கள் முதல் பிஸினஸ் பிரஜெக்ட்
செய்யும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.



வின்மணி சிந்தனை
அடுத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் சந்தோஷத்தையும்
கெடுதலையும் ஆண்டவன் எப்போதும் இரட்டிப்பாகவே
நமக்கு கொடுப்பார்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முதன் முதலாக மின்சாரஇரயில் ஓடத்தொடங்கிய
 இடம் எது ?
2.ஹிட்லரை சந்தித்துப்பேசிய ஒரே தமிழர் யார் ?
3.ஆங்கிலக்கால்வாயை கடந்த முதல் ஆசியப் பெண் யார் ?
4.அயோத்தி எந்த நதிக்கரையில் உள்ளது ?
5.வெள்ளையனே வெளியேறுஇயக்கம் எந்த ஆண்டு நடைபெற்றது?
6.முதன் முதலாக சமாதான சின்னமாக புறவை வரைந்த ஒவியர்
 யார் ?
7.தண்டியாத்திரை எந்த ஆண்டு நடந்தது ?
8.சீனாக்கு முதலில் வழங்கப்பட்ட பெயர் என்ன ?
9.முதல் முஸ்லீம் பெண்ணரசி யார் ?
10.முதன் முதலில் கிரிக்கெட் மட்டையை வடிவமைத்தவர் யார்?
பதில்கள்:
1.மும்பை,2.ஜி.டி.நாயுடு,3.ஆர்த்தி ஸர்ஷா,  4.சரயு,
5.1942, 6. பிகாஸோ,7.1928, 8.கேதே.
9.ரஸியா பேகம், 10.ஜான்ஸ்மால்.



இன்று  ஜனவரி 13 
பெயர்
: ராகேஷ் ஷர்மா,
பிறந்ததேதி : ஜனவரி 13 , 1949
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்
பிறந்தவர்.விண்வெளிக்குச் சென்ற 138வது
மனிதராவார்.இவர் விண்வெளியில்
8 நாட்கள் தங்கியிருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


ராகேஷ் ஷர்மா




இன்று ஜனவரி 13
பெயர் : ராகேஷ் ஷர்மா,
பிறந்ததேதி : ஜனவரி 13 , 1949
விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில்
பிறந்தவர்.விண்வெளிக்குச் சென்ற 138வது
மனிதராவார்.இவர் விண்வெளியில்
8 நாட்கள் தங்கியிருந்தார்.

8 comments:

  1. ரொம்ப நல்லாயிருக்கு! நன்றி சார்!

    ReplyDelete
  2. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. For online power point presentation, we can use this site also.

    http://show.zoho.com

    ReplyDelete
  4. மிக அருமையான தகவல்

    ReplyDelete
  5. Useful post sir. thanks..

    Anyway I feel Google Docs is more powerful. eventhough 280slides has vey beutiful interface, it does not have many functions that Docs has. The list of templates is small and some other features are also absent. isnt it?

    ReplyDelete
  6. @ Jaleelakamal
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. @ Abarajithan
    ஆம் சரிதான் , நீங்கள் ஒருமுறைப் பயன்படுத்திப்பாருங்கள்.

    ReplyDelete

Post Top Ad