எளிதாக சில நிமிடங்களில் சரியான அளவுள்ள புகைப்படமாக
மாற்றி உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4683" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
சோசியல் நெட்வொர்க் மேல் மக்களுக்கு இருக்கும் மோகம்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. பள்ளிக்
குழந்தைகள் முதல் பாலிவுட் பிரபலம் வரை சோசியல்
நெட்வொர்க்-ல் கணக்கு வைக்காத ஆள் என்று யாரும் இல்லை,
இப்படி வேகமாக வளந்து வரும் சோசியல் நெட்வொர்க்-ல்
நம் புகைப்படத்தை சரியான அளவில் தேர்ந்தெடுத்து எடிட்
செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://mypictr.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை அழுத்தி எந்த புகைப்படத்தை அப்லோட் செய்ய
வேண்டுமோ அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அதன் பின் நம் புகைப்படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை
தேந்தெடுத்து விட்டு, அடுத்து Network என்பதில் நாம் எந்த சோசியல்
நெட்வொர்க் பயன்படுத்துகிறோமோ அதை தேந்தெடுத்துக்கொண்டு
Pictrit என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும்
திரையில் நாம் தேர்ந்தெடுத்த பகுதி அழகான புகைப்படமாக
நம் சோசியல் நெட்வொர்க்-க்கு தகுந்தபடி மாற்றப்பட்டிருக்கும்.
Click here to Download என்பதை சொடுக்கி புகைப்படத்தை நம்
கணினியில் சேமித்து பின் நாம் தேர்ந்தெடுத்த நெட்வொர்க்-ல்
புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டியது தான். சோசியல்
நெட்வொர்க் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
நேர்மையான அரசியல் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும்
ஆயுதம் என்பதை அரசியல்வாதி அறிவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வளைந்து வளைந்து செல்லும் உயிரினம் எது ?
2.ஒலிம்பிக் போட்டியில் எந்த ஆண்டு ஹாக்கி சேர்க்கப்பட்டது ?
3.மனித தலை எத்தனை எலும்புகளால் ஆனது ?
4.கோல்ஃப் மைதானத்தில் எத்தனை குழிகள் உள்ளன ?
5.உலகின் மிக பழமையான விளையாட்டு எது ?
6.கிரிக்கெட் ஸ்டெம்பின் உயரம் என்ன ?
7.பேட்மிட்டன் கோர்ட்டின் அளவு என்ன ?
8.ஒலிம்பிக் போட்டியால் எந்தக்கடவுள் சிறப்பிக்கப் படுகிறார் ?
9.கிரிக்கெட் பிட்ச்-ன் நீளம் என்ன ?
10.எந்த விளையாட்டில் 22 பந்துக்கள் பயன்படுத்தப்படுகிறது ?
பதில்கள்:
1.பாம்பு,2.1928,3.22 எலும்புகளால், 4.18,
5.போலோ, 6.28 அங்குலம்,7.20+ 44 அடி, 8.சீயஸ் என்ற
கிரேக்க கடவுள். 9.22 யார்ட், 10.ஸ்நூக்கர்.
இன்று ஜனவரி 14
பெயர் : நாராயண் கார்த்திகேயன்,
பிறந்ததேதி : ஜனவரி 14 , 1977
ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில்
பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான
இவர் உலக மோட்டர் பந்தயங்களிலேயே
முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1
போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே
இந்தியர் ஆவார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ
விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
nanri
ReplyDelete@ umapathy
ReplyDeleteமிக்க நன்றி