கொள்ளும் வகையில் அவர்களின் பெயர் அல்லது வசிப்பிடம்
அல்லது எந்த மாநிலம் என்பதை கொடுத்து கிரிமினல் Records
எளிதாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குற்றவாளிகள் பற்றிய தகவல்களை அனைவரும் தெரிந்து
கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த்தளத்தில் குற்றவாளிகளின் பெயர் அல்லது முகவரி கொடுத்து
தேடினால் நமக்கு அவர்களை பற்றிய தகவல்களும் கூடவே
அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பதையும் உடனடியாக
காட்டுகிறது. வேடிக்கையாக இந்தத்தளம் தெரிந்தாலும் இதன்
பயன் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஏதாவது
குற்றம் நடக்கிறது என்றால் இதற்கு முன் இந்தப்பகுதியில்
இதே போல் குற்றம் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை
அனைவரும் தெரிந்து கொள்ளவும், புதிதாக நாம் ஒரு
மாநிலத்திற்கு சென்று வசிக்கும் போது அந்த மாநிலத்தில்
அடிக்கடி நடக்கும் குற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்ள
வசதியாகவும் இந்ததளம் அமைந்துள்ளது. தற்போது
அமெரிக்காவில் இருக்கும் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை
மட்டும் இந்ததளம் கொடுக்கிறது.
இணையதள முகவரி : http://www.criminalsearches.com
வின்மணி சிந்தனை
வேலை செய்யாமல் இருப்பது தான் உலகிலே கடினமான
வேலை , வேலை செய்வது தான் எளிதான வேலை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகில் தங்கம் அதிகமாக கிடைக்கும் இடம் எது ?
2.பிரான்ஸ் நாட்டு நாணயத்தின் பெயர் ?
3.இந்தியாவின் முதல் நூலகம் எது ?
4.உலகில் உல்லன் நூல் தயாரிப்பதில் முதலிடம் வகிக்கும்
நாடு எது ?
5.இந்தியாவில் சிறிய மாநிலம் எது ?
6.உலகில் திராட்சை அதிகமாக விளையும் இடம் எது ?
7.தக்காளி அதிகம் உற்பத்தி ஆகும் நாடு எது ?
8.உலகில் நிக்கல் தாது அதிகமாக கிடைக்கும் இடம் எது ?
9.இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் எங்குள்ளது ?
10.பரிணாம் என்ற கொள்கையை வகுத்தவர் யார் ?
பதில்கள்:
1.தென் ஆப்பிரிக்கா,2.பிராஸ்,3.வில்லியம் கேரே,4.சீனா ,
5.சிக்கிம்,6.பிரான்ஸ், 7.அமெரிக்கா,8.கனடா.9.பாட்னாவில்,
10.டார்வின்.
இன்று ஜனவரி 8
பெயர் : கலீலியோ கலிலி ,
மறைந்த தேதி : ஜனவரி 8, 1642
ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும்
இயற்பியலாளரும் ஆவார்."இயற்பியலின் தந்தை"
என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற
வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை"
எனக் குறிப்பிடப்படுகின்றார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:
Post a Comment