Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, December 28, 2010

Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்

சுதந்திர இலவச மென்பொருளில் நாம் இன்று பார்க்க இருப்பது
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.



Suthanthira ilavasa menporul  டாப் 10 - ல் இரண்டாம் இடம்
பிடித்திருக்கும் மென்பொருள் வீடியோ எடிட்டிங் வேலை செய்ய
உதவுகிறது. மென்பொருளின் பெயர் அவேய்ட் மக்ஸ் (Avide mux ).
சாதாரணமாக வீடியோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால்
பெரிய அளவில் காசு கொடுத்து வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வாங்குவோம் ஆனால் எளிய முறையில் இலவசமாக கிடைக்கும்
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். வீடியோவில் விரும்பிய
பகுதியை வெட்டி (Cut) தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம்.
வீடியோவில் இருக்கும் கலர், பிரைட்னஸ் , போன்றவற்றை
மாற்றலாம். வீடியோவிற்கு விரும்பிய ஆடியோவை சேர்க்கலாம்.



AVI, DVD , MPEG ,MP4  மற்றும் பல Format- களுக்கு துணைபுரிகிறது.
Noise இருந்தால் அதையும் நீக்கலாம்.வீடியோவிற்கு Title
தேவையென்றால் அதுவும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின்
நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்.
இப்படி  வீடியோ எடிட்டிங் வேலைகளை செய்ய உதவும் இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Download



வின்மணி சிந்தனை
அன்பான வார்த்தை கூறி யாரை வேண்டுமானாலும் வேலை
வாங்கலாம்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் குட்டி ஜப்பான் எந்த ஊர் ?
2.ஐரோப்பாவின் மிக நீளமான நதி எது ?
3.வெடிமருந்தை கண்டுபிடித்தவர்கள் யார் ?
4.எத்தனை ஏக்கர் கொண்டது ஒரு சதுரமைல் ?
5.தங்க கொம்பு எங்கே இருக்கிறது ?
6.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார் ?
7.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ?
8.ஜல வாயுவை கண்டுபிடித்தவர் யார் ?
9.எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்பது என்ன ?
10.ஒலிப்பெருக்கியை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.சிவகாசி, 2.வோல்கா,3.சீனர்கள், 4.640 ஏக்கர்,
5.இஸ்தான்புல்,6.சர் ஹம்ஃப்ரி டேவி,7.பெஞ்சமின் பிராங்களின்,
8.ஹென்றி காவெண்டிஸ்.9.பருத்தி, 10.ரைஸ் கெல்லாக்.



இன்று டிசம்பர் 28 
பெயர் : திருபாய் அம்பானி,
பிறந்ததேதி : டிசம்பர் 28, 1932
திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும்,
தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி, குடிசையில்
இருந்து கோபுரத்திற்கு உயர்ந்த இந்திய
வர்த்தக உலக ஜாம்பவான் ஆவார்.இவர் தனது
உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ்

இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். இவருடைய
மகன்கள்
அனில் மற்றும் முகேஷ் ஆகிய இரு
அம்பானிகளும் உலகின்
பெரும் பணக்காரர்கள்
வரிசையில் இடம் பெற்றிருக்கின்றனர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

11 comments:

  1. HAPPY NEW YEAR 2001TO YOU & ALL YOUR FAMALY MEMBERS .I WISH YOU ALL THE BEST IN YOUR LIFE . YOUR WORK IS WELL . KEEP IT UP .
    ------THOTAVASU.

    ReplyDelete
  2. @ b.srinivasan
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. நன்றி..!! பயனுள்ள பதிவு..!!

    ReplyDelete
  4. @ Devarajan
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள சிறப்பான செய்தி.....நன்றி விண் மணியாரே.... உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நான் இது போன்றவற்றைத் தான் நேற்று தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் தளத்தில் கூட சர்ச் செய்து பார்த்தேன். பின்னர் சிலவற்றை பதிவிறக்கம் செய்து பார்த்ததில் எல்லாம் ட்ரையல் வெர்ஷன் - ரிசல்யூஷன் குறைவாக உள்ளது. தக்க சமயத்தில் - வழக்கம் போல - நல்ல தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள். பயன்படுத்திப் பார்த்து விட்டு பின்னர் சொல்கிறேன். நற்பணிக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. @ ramanans
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. Very useful post... Keep rocking mani!!!!!!!!!

    ReplyDelete
  9. @ abbu
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. நண்பா, இதே போல் mp3 பாடல்களை edit செய்ய software ஏதேனும் இருக்கா?

    ReplyDelete
  11. @ 2009kr
    விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad