Suthanthira menporul டாப் 3 - போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, December 28, 2010

Suthanthira menporul டாப் 3 - போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.

புகைப்படங்களை வைத்து செய்யும் அனைத்து வேலைகளுக்கும் நாம்
பயன்படுத்தும் போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான
மற்றொரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



புகைப்படங்களின் நீள அகலத்தை மாற்றுவதில் தொடங்கி கருப்பு
வெள்ளை புகைப்படத்தை கலர் புகைப்படமாக மாற்றுவது வரை
அனைத்து புகைப்பட வேலைகளுக்கும் அடோப் நிறுவனத்தில்
இருந்து வெளிவரும் வரும் போட்டோஷாப் மென்பொருளைத்தான்
பயன்படுத்துகிறோம் ஆனால் இந்த கட்டண மென்பொருளுக்கு
மத்தியில் இதில் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.



Suthanthira menporul  டாப் 3ல் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
இந்த மென்பொருளின் பெயர் Gimp. இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக போட்டோஷாப் மென்பொருள்
உருவாக்கும் PSD கோப்பை கூட நாம் இந்த மென்பொருளில்
பயன்படுத்தலாம். புகைப்பட வேலைகள் செய்யும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். Download என்பதை சொடுக்கி
மென்பொருளை இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்.

Download



வின்மணி சிந்தனை
மன்னிக்கும் குணம் இறைவன் நமக்கு கொடுத்தது. இந்த
குணம் எப்போதும் நமக்கு மன அமைதியை கொடுக்கும்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் தமிழ் சங்கம் எங்கு தோன்றியது ?
2.அல்லி மலர் எப்போது அதிகமாக பூக்கும் ?
3.10 ரூபாய் நோட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது ?
4.போலந்தின் தலைநகரம் எது ?
5.ஏலச்செடி எத்தனை ஆண்டுகளுக்கு பயன்தரும் ?
6.ஆக்ரா கோட்டையை கட்டியது யார் ?
7.மீன் கூட்டத்திற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் ?
8.குஜராத் தலைநகர் எது ?
9.குதிரைக்கு எத்தனை பற்கள் உண்டு ?
10.முதல் மகா யுத்தம் எத்தனை வருடம் நடைபெற்றது ?
பதில்கள்:
1.தென் மதுரையில், 2.மழை காலத்தில்,3.ரிசர்வ் பேங் கவர்னர்,
4.வர்ஸா,5.40 ஆண்டுகளுக்கு,6.அக்பர்,7.School,8.காந்தி நகர்.
9.ஆண் குதிரைக்கு 40 , பெண் குதிரைக்கு 36, 10.4 ஆண்டுகள்.



இன்று டிசம்பர் 29
பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன்
சிறப்பு நாள் : டிசம்பர் 29, 1891

அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும்
ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை
உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான
வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று
தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு சொந்தகாரர்.
தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு
செய்துள்ளார் எடிசன்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

12 comments:

  1. அடோபி போட்டோஷாப்புக்கு இணையான மென்பொருள்தான் இது..!!பல சிறப்பம்சங்கள் உள்ளது இதில்..!! பதிவிற்கு நன்றி..!!.

    ReplyDelete
  2. @ salemdeva
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து விட்டேன். இன்னும் பயன்படுத்தவில்லை. இலவச மென்பொருள் கிடைக்க உதவிமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. @ Thanigasalam
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. I already used it. It is an efficient one! Thank you!

    ReplyDelete
  6. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. Thankyou so much.

    ReplyDelete
  8. @ puliyuran raja
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. @ jim
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. போட்டோஷாப் பற்றிய இலவச நூல் எங்காவது கிடைக்குமா நண்பரே?

    எங்கும் கற்றுக்கொள்ளாமல் போட்டோஷாப்-ஐ பயன்படுத்த எனக்கு ஆசை.

    எனது ஆசை நிறை வேறுமா?

    ReplyDelete

Post Top Ad