suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, December 27, 2010

suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம்.

பிரம்மாண்டமான மென்பொருளுக்கு மத்தியில் அது செய்யும் அதே
வேலையை இலவசமாய் செய்ய பல மென்பொருள்கள் உள்ளது
இதில் உலகஅளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) என்ன
என்பதையும் அதை அனைத்து மக்களும் எப்படி இலவசமாய்
தரவிரக்கி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும், சுதந்திர இலவச
மென்பொருளில் முதல் 10 இடம் பெறும் மென்பொருள்களை
தனித்தியாக அதன் பயன்களுடன் பார்க்க இருக்கிறோம் இன்று
டாப் 10 -ல் முதலிடம் பெறும் மென்பொருளை பற்றி பார்க்கலாம்.



டாப் 10 -ல் முதல் முத்தான இடம் பெற்றிருக்கும் மென்பொருள் பற்றி
சொல்ல வேண்டுமென்றால் அலுவலக வேலைகளுக்கும், கிராப், மேப்
போன்றவை வரைவதற்கும் நாம் பயன்படுத்தும் Microsoft Visio போன்ற
ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோவில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதை எல்லாம் நாம் இந்த இலவச மென்பொருள்
கொண்டு செய்யலாம். மென்பொருளின் பெயர் Dia (டயா). கணினித்
துறையில் Flow Chart ,Entity relationship diagrams, UML diagrams,
Network diagrams Circuit போன்ற வேலைகளுக்கு இந்த மென்பொருள்
பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மென்பொருளை Download
என்பதை சொடுக்கி தரவிரக்கிக் கொள்ளலாம்.

Download


வின்மணி சிந்தனை
நல்லது செய்யும் எண்ணம் உள்ளவருக்கு இறைவன் அவர்
அருகில் இருந்து உதவி செய்கிறான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா விடுதலை அடைந்த போது பொதுத்தேர்தல் எப்போது
 நடந்தது ?
2.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன ?
3.ஆமையின் வேகம் எவ்வளவு ?
4.பைபிளை லத்தின் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு
மொழிபெயர்த்தவர் யார் ?
5.பாரதத்தின் முதல் பெண் வக்கீல் யார் ?
6.விசைத்தறியின் தந்தை யார் ?
7.காற்றிலிருந்து தயாரிக்கும் உரத்தின் பெயர் என்ன ?
8.தந்தம் தரும் இரண்டு பிராணிகளின் பெயர் என்ன ?
9.மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் எது ?
10.எந்த உலோகம் மிகவும் இலேசானது ?
பதில்கள்:
1.1952, 2.சுவாமி வேதாசலம்,3.மணிக்கு 0.17 மைல்,
4.வில்லியம் டைன் டேல், 5.ஸ்ரீமதி ரெஜினா குப்தா,
6.எட்மண்டு கார்ட்ரைட், 7.அம்மோனியம் நைட்ரேட்,
8.யானை, காட்டுப்பன்றி.9.போபால், 10.லித்தியம்.


இன்று டிசம்பர் 27 
பெயர் : லூயி பாஸ்டர்,
பிறந்ததேதி : டிசம்பர் 27, 1822
ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர்
ஆய்வாளரும்
வேதியியல் ஆய்வாளரும்
ஆவார்.இவர் நடத்திய
ஆய்வுகளின் பயனாய்
பலநோய்கள் நுண்ணியிரிகளால்
ஏற்படுவது
என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினார்,
நுண்ணியிரி
இயலை நிறுவிய மூவருள் இவர்
ஒருவராகக் கருதப்படுகின்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

8 comments:

  1. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. அனைத்து மென்பொருள்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்..!!பதிவிற்கு நன்றி..!!

    ReplyDelete
  3. @ Devarajan
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. your infomations very useful to me

    ReplyDelete
  5. @ மிக்க நன்றி
    தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  6. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

    ReplyDelete

Post Top Ad