பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, December 2, 2010

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

சாதாரண பயனாளர் கணக்கு முதல் பேங்க் ஆன்லைன் அக்கவுண்ட்
வரை அனைத்திற்கும் பயன்படுத்தும் கடவுச்சொல் ( Password) எப்படி
பாதுகாப்பாக அமைப்பது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4180" align="aligncenter" width="390" caption="படம் 1"][/caption]

கணினியில் உள்செல்ல நாம் பயன்படுத்தும் (Password) முதல்
இமெயில் பயன்படுத்தும் கடவுச்சொல் வரை அனைத்தும் பாதுகாப்பாக
இருப்பது மிக முக்கியம் ஆனால் கடவுச்சொல்லுக்கு நாம்
பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்தக்குறையை
நீக்கி நமக்கு மிக பாதுகாப்பான கடவுச்சொல் வைப்பதற்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

[caption id="attachment_4181" align="aligncenter" width="380" caption="படம் 2"][/caption]

இணையதள முகவரி : http://www.safepasswd.com

இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Type என்பதில் நமக்கு
பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின் New Password என்ற
பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் பாதுகாப்பான
கடவுச்சொல் நமக்கு கிடைக்கும். இதைத்தான் பயன்படுத்த வேண்டும்
என்பதில்லை இதில் இருப்பது போல் நாம் விருப்பப்படி கடவுச்சொல்
அமைத்துக்கொள்ளலாம். கடவுச்சொல் மேல் முக்கியத்துவம்
கொடுக்கும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
இன்றும் நாளையும் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நல்லது
செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேனீக்கள் எந்த பேரிணத்தை சேர்ந்தது ?
2.போலந்து நாட்டின் தலைநகர் எது ?
3.உலகின் மிக உயர்ந்த விமான நிலையத்தின் பெயர் ?
4.குரல் உறுப்பான ஸ்ன்ரிக்ஸ் இல்லாத பறவை எது ?
5.சயாம் நாட்டின் தற்போதைய பெயர் என்ன ?
6.நீச்சல் தெரியாதவர்கள் கூட மிதக்கக்கூடிய கடல் எது ?
7.பச்சைத்தாவரத்துக்கு பச்சை நிறத்தை கொடுக்கும் சேர்மம் எது?
8.இந்தியாவின் தலைமை வங்கி எது ?
9.மனிதர்களின் விலா எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
10.இஸ்லாம் மதத்தினரின் மதநூல் எது ?
பதில்கள்:
1.ஏபிஸ்,2.வார்ஸா,3.லே,4.நாரை,5.தாய்லாந்து,
6.சாக்கடல்,7.குளோரோபில், 8.ரிசர்வ் வங்கி, 9.24.
10.குர்ஆன்.


இன்று டிசம்பர் 2 
பெயர் : ரா. வெங்கட்ராமன் ,
பிறந்த தேதி : டிசம்பர் 2, 1910
இந்தியாவின்  எட்டாவது குடியரசுத் தலைவராகப்
பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை
பதவியில் இருந்தார். அதற்கு முன் நான்கு
ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக
இருந்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல
அமைச்சர்
பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad