இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, December 1, 2010

இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வேர்டுபிரஸ் ( Wordpress) -ன் அடுத்த மிகப்பெரும் முயற்சியாக
வெளிவந்திருக்கும் ஃபுட்பிரஸ் (Foodpress)-ல் சமையல் வகைகள்
பற்றிய பலவகையான அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



வேர்டுபிரஸ்-ல் அதிகமாக சமையல் பற்றி தினமும் ஒன்றுக்கும்
மேற்பட்ட தளங்கள் வெளிவந்து கொண்டிருக்க, இதற்காக
வேர்பிரஸ் -ல் இருந்து முழுமையாக உணவு பற்றிய அனைத்து
தகவல்களையும் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த Foodprees -ல்
நாம் பல நாட்டு சமையல் வகைகள் பற்றியும் எளிதாக தெரிந்து
கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://foodpress.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக வெளிவந்திருக்கும் அனைத்து
உணவுவகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்துமஸ் நேரம்
புதிதாக என்ன கேக் வகைகள் வந்துள்ளது அதன் சிறப்பம்சம் என்ன
அதன் வடிவமைப்பு எப்படி இருக்கிறது எந்த நாட்டில் இதை முதன்
முதலில் உருவாக்க்குகினர் என்ற அனைத்து தகவல்களையும்
நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம். சீனி இல்லாமல், உப்பு
சேராமால் , காரம் குறைவாக உள்ளபடி ஏதாவது உணவு இருக்குறதா
என்று தேடும் நமக்கு உணவை மட்டுமல்ல அதை எப்படி செய்ய
வேண்டும் என்று சேர்த்தே சொல்லிக்கொடுக்கின்றது இந்தத்தளம்.
நம்மூரில் கேட்டரிங் படிக்கும் மாணவர்களும் உணவகம்
வைத்திருக்கும் நண்பர்களுக்கும் இந்தத்தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
அரசால் நியமிக்கப்பட்டு செய்யும் வேலைக்கு பணம் (லஞ்சம்)
வாங்கும் அதிகாரி பெரும் நோயால் அவதிப்படுவான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் சலவை நிலையம் தோன்றிய இடம் எது ? 
2.ரோம் அரசின் முதல் சக்கரவர்த்தி ?
3.காந்தியின் முதல் சீடர் யார் ?
4.பல சக்கர இரயிலை கண்டுபிடித்தவர் யார் ?
5.இந்தியாவில் முதல் முதல் மந்திரியான பெண் யார் ?
6.மக்கள் கூட்ட நெரிசலுக்கான சிக்னல் எந்த ஆண்டு முதல்
உருவாக்கப்பட்டது?
7.சிறந்த நடிகருக்கு வழங்கப்படும் தேசிய விருது ?
8.பேட்டரி செல்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
9.மையை முதலில் கண்டறிந்தவர்கள் ?
10.கிளி ஜோசியம் முதன் முதலில் எங்கு தோன்றியது ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.அகஸ்டஸ்,3.வினோபாபாவே,
4.பிளெங்கின் சாப்,5.விஜயலெட்சுமி,6.1868,7.பாரத் பட்டம்,
8.1860, 9.சீன நாட்டினர். 10.பர்மா.


இன்று டிசம்பர் 1 
பெயர் : மேதா பட்கர் ,
பிறந்த தேதி : டிசம்பர் 1, 1954
இந்தியவில் பரவலாக அறிந்த சமுகஉரிமைப்
போராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா
ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு
எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல்

நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன்
என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

Post Top Ad