பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, November 30, 2010

பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்

உலகத்தில் நடக்கும் பல பாவங்களை பார்க்க முடியாமல் இருக்கும்
பார்வையில்லாதவர்கள் இனி தங்களுக்கு வரும் இமெயிலை வாயால்
பேச சொல்லி கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4159" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

பார்வையில்லாத நண்பர்களுக்கு வரும் இமெயில் செய்தி மற்றும்
அவர்களுக்கு வரும் அனைத்து டெக்ஸ்ட் செய்திகளையும் நாம்
இனி ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம். சில வரிகளில்
செய்தி வந்தால் மட்டும் தான் அடுத்தவர்கள் படித்து சொல்லுவார்கள்
அதிகமான அளவு செய்தி வந்தால் அவர்களும் படித்துச்சொல்ல
தயங்குவார்கள் இந்த நிலையை மாற்றி நமக்கு வரும் அத்தனை
செய்திகளையும் எளிதாக பேச சொல்லி கேட்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://beta.blindspeak.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் பேச வேண்டிய வார்த்தையை கொடுத்து அங்கு
இருக்கும் Preview என்ற பொத்தானை அழுத்தினால் போதும்
அடுத்த சில நொடிகளில் நாம் டெக்ஸ்ட் ஆக கொடுத்ததை
பேசி காட்டுகிறது இந்ததளம் எந்த மென்பொருள் டூலும் இல்லாமல்
எளிதாக டெக்ஸ்ட்- ஐ பேச்சா மாற்றலாம். கண்டிப்பாக இந்ததளம்
பார்வையில்லாத நண்பர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
உதவும்.


வின்மணி சிந்தனை
வீரம் காட்ட வேண்டிய இடத்தில் வீரமும் , அன்பு
காட்ட வேண்டிய இடத்தில் அன்பும் காட்டுபவன் வல்லவன்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எறும்புகள் எத்தனை நாட்கள் உணவின்றி வாழும்
தன்மையுடையது ?
2.எந்த தமிழ் எழுத்தில் ஒரு ஜெர்மனி நதி ஒடுகிறது ?
3.முகத்தில் பருக்கள் உண்டாக காரணமான சுரப்பி எது ?
4.டெலிபோன் என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது?
5.எந்த நாட்டில் சத்தம் இல்லாத இரயிலை உருவாக்கியுள்ளனர் ?
6.நீரின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய உயிரிணம் எது ?
7.எலியை அழிக்கும் நச்சுப்பொருள் பெயர் என்ன ?
8.உலகின் மிக வெப்பமான இடம் எது ?
9.நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன் முதலில் எங்கு
 ஆரம்பிக்கப்பட்டது ?
10.உலகின் நீளமான பாதாள இரயில் பாதை எங்குள்ளது ?
பதில்கள்:
1.100 நாள்,2.ஆ,3.சீபம்,4.கிரேக்க மொழி,
5.ஜப்பான்,6.பிளாங்டான்,7.வெண்பாஸ்பரஸ்,
8.லிபியாவில் உள்ள அசிசி, 9.ஏதேன்ஸ். 10.லண்டன்.


இன்று நவம்பர் 30
பெயர் : வின்ஸ்டன் சர்ச்சில் ,

பிறந்த தேதி : நவம்பர் 30, 1874

மிகச்சிறந்த
பிரிட்டானிய பேச்சாளர்,
இராணுவ
அதிகாரி, வரலாற்றியலாளர்,
எழுத்திற்காக நோபல்
பரிசு  பெற்றவர்,
வரைவாளர் போன்ற சிறப்புப்
பெருமைகளையும்
கொண்டவர். போர் தந்திரமிக்கவர்
என்பதை இராணுவத்தில்
பணிபுரிந்தபோதே நிருபித்தவர்.
ஐக்கிய இராச்சியத்தின்
பிரதமாராகப் பதவிவகுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad