சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, November 29, 2010

சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி

சோசியல் நெட்வொர்க்-ல் பிரபலமான டிவிட்டர், FriendFeed, Flickr,
Yahoo News மற்றும் Blog comments (பின்னோட்டம்) போன்றவற்றை
எளிதாக சில நொடியில் பார்க்கின்றனர் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4151" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

நினைத்ததை அப்படியே சொல்லுங்கள் என்று அனைவரின் மனதிலும்
இருக்கும் இரகசியங்களை வெளிகொண்டு வருவதற்காகவும் நம்
குண நலன் என்ன என்பதை அடுத்தவர்கள் தெரிந்து கொண்டு
அதற்கு தகுந்தபடி நம்மை ஏமாற்றுவதும் சோசியல் நெட்வொர்க்
என்று சொல்லக்கூடிய இணையதளங்களில் பெரும்பாலும் நடந்து
கொண்டு இருக்கிறது. எப்படி நாம் கொடுக்கும் டிவிட்டர் செய்தி ,
பின்னோட்டம் போன்றவற்றை எளிதாக தேடி எடுக்கின்றனர். இதற்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://spy.appspot.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள்  எந்த வார்த்தை வேண்டுமானாலும் கொடுத்து
Spy என்ற பொத்தானை அழுத்தி தேடலாம் அடுத்து வரும் திரையில்
நாம் கொடுத்த வார்த்தை எந்த சோசியல் மீடியாக்களில் எல்லாம்
பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எளிதாக அடுத்து வரும்
திரையில் காட்ட்டும். இதைப்போல் பல தளங்கள் நாம் சோசியல்
மீடியாக்களில் பேசும் உரையாடலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
முக்கியம் இல்லாத செய்திகளையும் வாழ்த்துக்களையும் மட்டுமே
சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும். கூடவே
தங்கள் சுய விபரங்களை எக்காராணம் கொண்டு பகிர்ந்து
கொள்ளாமால் இருந்தால் இதைப்போன்ற தளங்களைக் கண்டு
அஞ்ச வேண்டியதில்லை.


வின்மணி சிந்தனை
அடுத்தவரை துன்பப்படுத்தாமல் நல்லது செய்பவருக்கு
நல்ல காரியம் உடனே நடக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் முதல் தேசப்படத்தை வெளியீட்டவர் யார் ?
2.உயிர்களின் தோற்றத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.கோள்களில் ஒளி மிகுந்த கோள் எது ?
4.செயற்கை முறையில் பெயிண்ட்களை தயாரிக்கும் முறையை
அறிமுகம் செய்தவர்கள் யார் ?
5.அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார் ?
6.இந்தியா அனுகுண்டு சோதனை நடத்திய இடம் எது ?
7.அறிவியல் மேதைகளுக்கு அளிக்கப்படும் விருது எது ?
8.சீனக்குடியரசை உருவாக்கியவர் யார் ?
9.யானை ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு உணவை
உட்கொள்ளும் ?
10.உடலை வளர்க்கும் கிருமிகள் எதில் உள்ளதாக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர் ?
பதில்கள்:
1.ஆக்வில்,2.டார்வின் ,3.சுக்கிரன்,4.இங்கிலாந்து நாட்டினர்,
5.ஜான் டால்டன்,6.பொக்ரான்,7.கவிஸ்கர் விருது,
8.சன்யாட் சென்,
9.150 கிலோ. 10.தயிர்.


இன்று நவம்பர் 29  
பெயர் : என். எஸ். கிருஷ்ணன் ,
பிறந்த தேதி : நவம்பர் 29, 1908

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும்
ஆவார்.49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு
காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து
காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார
வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர்
சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத்
தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை
உருவாக்கியவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது! நன்றி!

    ReplyDelete
  2. ஆஹா. இது நல்லாருக்கே. அருமையான தகவல் தோழரே

    ReplyDelete
  3. intha pagirvukku,nandri

    ReplyDelete

Post Top Ad