கூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, November 28, 2010

கூகுள் வீடியோ , பேஸ்புக் வீடியோ, யூடியுப் வீடியோ குவாலிட்டியுடன் தரவிரக்கலாம்.

கூகுள் டாக்ஸ்-ல் இருக்கும் வீடியோ மற்றும் பேஸ்புக் வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக
குவாலிட்டியுடன் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4141" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இணையத்தில் கிடைக்கும் அறிய பல வீடியோக்கள் பெரும்பாலும்
யூடியுப்,கூகுள் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் தான் அதிகமாக
கிடைக்கின்றது இதில் உள்ள வீடியோக்களை நம் கணினியில்
சேமிப்பதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.savevid.com

[caption id="attachment_4142" align="aligncenter" width="443" caption="படம் 2"][/caption]

உலகச் செய்திகள் முதல் அறிவியல் , கணினி பற்றிய உலகளாவிய
விளக்கங்கள் கொடுக்கும் வீடியோக்கள் , திரைபடங்கள் இன்னும்
பலவற்றை கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கும் கூகுள்,
யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இருக்கும்
வீடியோவை நம் கணினியில் எளிதாக சேமிக்கலாம். இந்ததளத்திற்கு
சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் எந்த தளத்தின்
வீடியோ சேமிக்க வேண்டுமோ அதை கொடுக்கவும் உதாரணமாக
நாம் கூகுள் வீடியோவின் முகவரியை கொடுத்துள்ளோம்.
url முகவரி கொடுத்து Download என்ற பொத்தானை அழுத்தியதும்
நமக்கு படம் 2-ல் காட்டியபடி எந்த பார்மட்-ல் தரவிரக்கம்
ஆகப்போகிறது என்பதையும் காட்டும் இப்போது FLV என்று
இருக்கும் ஐகானை சொடுக்கி நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
வீடியோவை தரவிரக்க விரும்பும் நண்பர்களுக்கு  இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
மனதில் ஆணவம் இல்லாமல் இருக்கும் மனிதர் எந்த
ஆலயத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் மிக குறைவாக மக்கள் உள்ள மாநிலம் எது ?
2.இந்திய தேசிய காங்கிரஸ் எப்போது தொடங்கப்பட்டது ?
3.இமயமலையில் வாழும் பனி மனிதனின் பெயர் என்ன ?
4.”ஏர் இந்தியா “ எந்த் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ?
5.சைப்ரஸ் நாட்டின் தேசிய தினம் எது ?
6.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல்
கல்லூரியின் பெயர் என்ன ?
7.இந்திய இராணுவ நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
8.பசுவுக்கு மொத்தம் எத்தனை இரைப்பைகள் உள்ளது ?
9.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பிரபலமானது ?
10.மேற்கு இரயில்வேயின் தலமையகம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.சிக்கிம்,2.1885 ,3.ஏட்டி,4.1946, 5.ஏப்ரல் 1,
6.தாம்ஸன் கல்லூரி,7.ஜனவரி 21, 8. 4,
9. புழல். 10.மும்பை.


இன்று நவம்பர் 28  
பெயர் : என்ரிக்கோ பெர்மி,
மறைந்த தேதி : செப்டம்பர் 28, 1954

ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல்
அறிஞராவார். உலகின் முதலாவது
அணுக்கரு உலையை உருவாக்கியமைக்
-காகவும் குவாண்டம் கொள்கை,அணுக்கரு
இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை
போன்றவற்றில் இவரது பங்களிப்பு இன்றியமையாதது

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. அய்யனார் வாசுதேவன்November 30, 2010 at 10:43 AM

    நன்றி

    ReplyDelete
  2. @ அய்யனார் வாசுதேவன்
    நன்றி

    ReplyDelete

Post Top Ad