வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக
நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம்
இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4131" align="aligncenter" width="170" caption="படம் 1"][/caption]
Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு
நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில்
குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல்
ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை
இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.thecolor.com
[caption id="attachment_4132" align="aligncenter" width="389" caption="படம் 2"][/caption]
இந்ததளத்திற்கு சென்று நாம் எந்தத் துறை சார்ந்த படம் வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் அடுத்து நாம் Paint ஐ
திறந்து விரும்பிய வண்ணத்தை கொடுத்து மகிழலாம். இதில் என்ன
வேடிக்கை என்றால் புத்தகத்தில் வரும் படங்களுக்கு நாம் ஒரு முறை
மட்டும் தான் வண்ணம் பூச முடியும் ஆனால் கணினி மூலம் paint
செய்வதால் படத்தை காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரே
படத்திற்கு வித்தியாசமாக பல தடவை வண்ணம் பூசி பழகலாம்.
இனி தமிழ் செய்தித்தாளில் வாரம் ஒரு முறை வரும் படத்திற்காக
நம் குட்டீஸ் காத்திருக்க வேண்டாம் நினைத்த நேரத்தில் சென்று
படத்திற்கு வண்ணம் கொடுக்கலாம் கூடவே எந்த மைச்செலவும்
ஆகப்போவதில்லை.
வின்மணி சிந்தனை
மனதில் இருக்கும் அன்பான குணத்தை நாம் வெளிக்கொண்டு
வர வேண்டும் அப்போது தான் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இங்கிலீஸ் கால்வாயை முதன் முதலில் கடந்த ஆண் யார் ?
2.அமெரிக்க முதல் செயற்கைகோளை எப்போது விண்ணில்
ஏவியது ?
3.வினிகரின் வேதியல் பெயர் என்ன ?
4.இந்தியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுவது எது ?
5.வாட்டிகன் நகரத்தின் சிறப்பு பெயர் என்ன ?
6.கண்ணை குருடாக்க கூடிய பாக்டீரியா எது ?
7.உலகிலேய மிகப்பெரிய நூல் நிலையம் எங்குள்ளது ?
8.மிகவும் பழமையான மதம் எது ?
9.மிளகு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
10.பறவைகளில் வேகமாக பறக்ககூடியது எது ?
பதில்கள்:
1.கேப்டன் வெப்,2.1958 ,3.அசிடிக் அமிலம்,4.பெங்களூர்,
5.புனிதப் பார்வை, 6.சுடோமோனஸ்,7.மாஸ்கோ,
8.இந்து மதம், 9.ஆந்திரா. 10.கழுகு.
இன்று நவம்பர் 27
பெயர் : புரூஸ் லீ,
மறைந்த தேதி : நவம்பர் 27, 1940
அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன்
என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற
ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ
என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத்
தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான
தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Thanks winmani
ReplyDeleteமிக்க நன்றி சார்!
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
@ எஸ். கே
ReplyDeleteமிக்க நன்றி
really useful win.............
ReplyDeletePaperless... Kids are happy bcz it's in computer parents are happy as they don't want to spend money on cryans and boards :)
@ abbu
ReplyDeleteமிக்க நன்றி