Adsense

தினம் தினம் தோன்றும் பல விதமான எண்ண ஓட்டங்கள் , அடுத்த
நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று என்னும் அனைவருக்கும்
எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து வெற்றியை அடையட வழி
காட்டுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4191" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் கூட
நம்மால் வெற்றியை அடைய முடிவதில்லை காரணம் என்னவென்று
சற்று சிந்தித்துப்பார்த்தால், நம் மனதில் தோன்றும் எண்ணத்துக்கு எப்படி
வலிமை கூட்டலாம் என்று ஒரு முறை கூட யோசித்ததில்லை, யோசிக்க
நமக்கு நேரமும் கிடைப்பதில்லை. சரி நேரம் கிடைத்தும் யோசித்து
பார்த்தால் அதற்குள் அடுத்த எண்ணம் வந்துவிடுகிறது இது தான் நிஜம்
ஆனால் இந்த தடைகளை எல்லாம் நீக்கி நம் எண்ணங்களுக்கு உயிர்
கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.exploratree.org.uk

[caption id="attachment_4192" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

”ஒரே வாரத்தில் பெரிய பணக்காரர் ஆகலாம்” , “ எண்ணங்களின்
வலிமை,” ”எண்ணங்களால் சாதிக்கலாம்” , ” வெற்றி பெற
சிந்தியுங்கள் “ , ” வெற்றி நம் கையில் “ , ” வெற்றி பெற்றவர்களின்
சூத்திரம் “ , “ நாளை நம் கையில் “, ” ஜெயித்து காட்டலாம் “ ,
” உயந்த சிந்தனை ” , ” வெற்றியின் ரகசியம் “ இப்படி பல
புத்தகங்கள் வந்துவிட்டது இருந்தும் இந்த புத்தகங்கள் சொல்லாத
ஒரு இரகசியத்தை இந்ததளம் நமக்கு சொல்கிறது. நம்மிடம் இருக்கும்
எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இந்த்தளத்தில் சென்று விருப்பப்படத்தை
சொடுக்கி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நம் எண்ணத்துக்கு
ஒவ்வொரு கிளையாக வரைந்து மரமாகக மாற்றி அதற்கு உயிர்
கொடுக்கலாம். ஒரு முறை நாம் படத்தை ( மரத்தை ) உருவாக்கிய
பின் எத்தனை முறை நாம் இந்த படத்தை பார்க்கிறோமோ
அப்போதெல்லாம் நம் எண்ணங்கள் ஒவ்வொரு கிளையாக வளர்ந்து
வெற்றியை நமக்கு எளிதில் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை. தீர்க்க முடியாத பிரச்சினைகள் பலவற்றை இதே போல்
வரைந்து பார்த்து பிரச்சினை இருக்கும் இடத்தை எளிதாக
கண்டுபிடித்து நாமே தீர்வு காணலாம். வாழ்வில்  வெற்றி பெற
நினைக்கும் அனைத்து வயதினருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.


வின்மணி சிந்தனை
இன்று நான் கற்றுகொண்ட பாடத்தை என் வாழ்வில்
தேவையானபோது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம்
எல்லோருக்கும் வர வேண்டும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ?
2.மூக்கு கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார் ?
3.உருது மொழியின் ஆதிப்பெயர் என்ன ?
4.அரபிக்கடலின் அரசி என அழைக்கப்படும் இடம் ?
5.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது ?
6.மியூசியங்கள் அதிகம் உள்ள நாடு எது ?
7.சீனா ஐக்கிய நாட்டு சபையில் இடம் பெற்ற ஆண்டு ?
8.இந்தியாவில் விண்வெளி ஆய்வுக்கழகம் உள்ள இடம் எது ?
9.ஏலச்செடி எத்தனை ஆண்டுகள் பலன் தரும் ?
10.உலகில் குதிரைகள் அதிகம் உள்ள நாடு எது ?
பதில்கள்:
1.ஜார்ஜ் வாஷிங்டன்,2.பெஞ்சமின் பிராங்கலின்,3.ரீக்தா,
4.கொச்சி,5.தஞ்சாவூர்,6.அமெரிக்கா,7.1971, 8.பெங்களூர்,
9.40 ஆண்டுகள்.10.அமெரிக்கா.


இன்று டிசம்பர் 3 
பெயர் : இராசேந்திர பிரசாத் ,
பிறந்த தேதி : டிசம்பர் 3, 1884

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின்
முதல் குடியரசுத் தலைவரும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
1950  முதல் 1962  வரை இந்திய குடியரசுத் தலைவராக
இருந்தார். நல்ல மனிதர், என்றும் நம் தேசம் உங்களை
மறவாது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

0 comments:

Post a Comment

 
Top