சோசியல் நெட்வொர்க்-ல் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, December 4, 2010

சோசியல் நெட்வொர்க்-ல் நண்பர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

Facebook, Twitter, Flickr, MySpace  மற்றும் பல சோசியல் நெட்வொர்க்-ல்
இருக்கும் நம் நண்பர்களை அவர்களின் பெயரை கொடுத்து ஒரே
நேரத்தில் அனைத்து சோசியல் நெட்வொர்க்-லிலும் தேடலாம
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4202" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

நண்பர்கள் மட்டுமல்ல நமக்கு தெரிந்தவர்கள் பெயர் மட்டும்
தான் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு
சோசியல் நெட்வொர்க்காக சென்று சென்று இனி தேட வேண்டாம்
ஒரே இடத்தில் இருந்து கொண்டு நாம் அனைத்து சோசியல்
நெட்வொர்க்லிலும் தேடலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://snitch.name

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் யாரைத் தேடவேண்டுமோ அவரின் First name
மற்றும் Last Name கொடுத்து எந்தெந்த சோசியல் நெட்வொர்க்-ல்
சென்று தேடவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன் பின்
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் கொடுத்த பெயருடன் உள்ள அனைவரின்
தகவல்களும் நமக்கு காட்டப்படும். மற்றதளங்களை விட இதில்
என்ன புதுமை இருக்கிறது என்றால் சோசியல் நெட்வொர்க்-ல்
பயனாளர் பெயர் எப்படி வேண்டுமானாலும் வைத்து இருப்பார்கள்
ஆனால் First Name மற்றும் Last Name வைத்து தேடுவதால்
பல பிரபலங்களின் சோசியல் முகவரியும் நமக்கு கிடைக்கும்.
சோசியல் நெட்வொர்க் பற்றி அதிக தகவல்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.


வின்மணி சிந்தனை
நல்லது செய்யும் யாரும் அடுத்தவர்களை ஒரு போதும்
குறை கூற வேண்டாம்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் பயிர் செய்யப்பட்ட தானியம் எது ?
2.தேசிய விருது பெற்ற முதல் நடிகை யார் ?
3.முதன் முதலின் சூப்ரிம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர்
 யார் ?
4.லீப் வருடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
5.சுருள் பிலிம்-ஐ கண்டுபிடுத்தவர் யார் ?
6.தண்ணீர் புகாத ரப்பரை கண்டிபிடித்தவர் யார் ?
7.செவ்வாய் கோள் நம் கண்களுக்கு எப்படித் தோன்றும் ?
8.கணக்கிடும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
9.மூலக்கூறுகளின் ஆற்றல் எந்த ஆற்றல் ?
10.இந்தியாவில் முதல்  தேசப்படத்தை வெளியீட்டவர் யார் ?
பதில்கள்:
1.பார்லி,2.லெட்சுமி,3.மார்ஷெல், 4.ஜூலியஸ் சீஸர்,
5.பியர்சன்,6.சார்லஸ் மசின் டோஷ்,7.சிவப்பு நிறமாக,
8.பாஸ்கெல்,9.மின் ஆற்றல்.10.ஆக்வில்.


இன்று டிசம்பர் 4 
பெயர் : ஐ. கே. குஜரால் ,
பிறந்த தேதி : டிசம்பர் 4, 1919
மேற்கு பஞ்சாபிலுள்ள  ஜீலம் நகரில் பிறந்தார்.
இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய
சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர்
1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு
போராட்டத்தில் ஈடுபட்டவர்.இந்தியாவின் 15வது
பிரதமர் ஆவார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Post Top Ad