இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, November 16, 2010

இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.

சொந்தமாக இணையதளம் இல்லாதவர்களும் இலவசமாக உங்கள்
எழுத்துக் கோப்புகளை ( Text Hosting ) செய்யலாம் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.படம் 1

நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் எழுத்துக்களை ஆன்லைன் மூலம்
இலவசமாக Host செய்யலாம், நமக்கென்று தனி இணையதள முகவரியும்
கடவுச்சொல் ( Password) வசதியும் இருக்கிறது. எந்தப்படமும் இல்லாத
எழுத்துக்களை (  Plain Text ) கோப்புகளை மட்டும் நாம் இலவசமாக
ஹோஸ்ட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://freetexthost.comபடம் 2

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்க்குள் எழுத்துக்களை தட்டச்சு செய்ய வேண்டியது தான்
50000 character  வரைக்கும் துணை புரிகிறது. தட்டச்சு செய்து
முடித்ததும் Optional Settings என்பதில் இந்த எழுத்துப்பக்கத்தை
பாப்பதற்கும் மறுபடியும் இதை Delete செய்ய வேண்டும் என்றால்
Admin Password என்பதும் கொடுத்து வைக்கலாம். எல்லாம்
கொடுத்து முடித்ததும் Verification Code -ஐ கொடுத்து Host it என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு
இணையதள முகவரி கிடைக்கும் ( படம் 2 ). இந்த முகவரியை
சொடுக்கி நாம் Text Hosting செய்ததை பார்க்கலாம்.வின்மணி சிந்தனை
அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அணுகுண்டு சோதனை முதன் முதலாக எப்போது நடந்தது ?
2.சென்னையில் இருக்கும் அண்ணாசாலைக்கு பழைய பெயர்
 என்ன ?
3.சூயல் கால்வாயின் நீளம் எவ்வளவு ?
4.நவரத்தினங்களில் மிகவும் கடினமானது எது ?
5.யானைக்கு எத்தனை பற்கள் இருக்கும் ?
6.நெதர்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன ?
7.மிகவும் வெப்பமான கிரகம் எது ?
8.ஜோகன்பர்க் நகரகம் எங்கே உள்ளது ?
9.6 மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கும் பறவை பெயர் என்ன?
10.அணுசக்தி மூலம் செல்லும் கப்பலைத் தயாரித்த முதல்
நாடு எது ? 
பதில்கள்:
1.1945, 2.மவுண்ட் ரோடு,3.100 மைல், 4.வைரம்,
5. 4, 6.கில்டர்,7.வீனஸ், 8.தென் ஆப்பிரிக்கா, 9.டெர்ன்.
10.அமெரிக்கா.இன்று நவம்பர் 16 
பெயர் : சின்னுவ அச்செபே,
பிறந்த தேதி : நவம்பர் 16, 1930
நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர்,
இலக்கிய விமர்சகர்.இவர் ஆங்கிலத்திலேயே
புதினங்கள், சிறுகதைகள்,கவிதைகள்,சிறுவர்
கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில்,
இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக
கணிக்கப்படுகின்றன.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

 

10 comments:

 1. நல்ல பயனுள்ள தகவல்! நன்றி!

  ReplyDelete
 2. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. hai, your website is very useful site thanks

  ReplyDelete
 4. நல்ல தகவல்

  very super ! ! !
  thank you....

  ReplyDelete
 5. @ முத்துவேல்
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. பயனுள்ள தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 7. @ nilaamathy
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. I was looking for a free document scanning software on the Internet. I had used Textbridge for the past 8 years with many versions of Windows OS and I was not willing to buy another expensive scanning software any more. Then I found some interesting ones online, Though not as good as commercial OCR softwares, they did produce promising results to me.

  ReplyDelete
 9. @ Harry
  விரைவில் தெரியப்படுத்துகிறோம். நன்றி

  ReplyDelete

Post Top Ad