ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, November 17, 2010

ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.

சில முக்கியமான ஆங்கிலப்பத்திரிகை கட்டுரைகளை நாம் Scan செய்து
படமாக (JPEG, bmp) வைத்திருப்போம். இந்த JPEG படமாக சேமித்ததை
எழுத்துக்களாக தனியாக பிரிக்கலாம். OCR என்று சொல்லக்கூடிய Optical
Character Recognition  டூல் மூலம் ஆன்லைன் வழியாக படத்திலுள்ள
எழுத்துக்களை தனியாக பிரிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.JPG, GIF, TIFF , BMP போன்ற படங்களில் உள்ள எழுத்துக்களை தனியாக
பிரித்து கொடுப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.free-ocr.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி  Choose file என்ற
பொத்தானை சொடுக்கி jpeg படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து எந்த மொழியில் படத்தில் உள்ள எழுத்துக்கள் இருக்கிறதோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து Send file என்ற பொத்தானை
சொடுக்கி அப்லோட் செய்யவும். அடுத்து வரும் திரையில் படத்தில்
உள்ள எழுத்துக்கள் தனியாக பிரிக்கப்பட்டு படம் 2-ல் உள்ளது போல்
வரும். OCR மென்பொருள் இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் இந்த
தளத்தை பயன்படுத்தி படத்தில் உள்ள எழுத்துக்களை மாற்றலாம்.
OCR பற்றிய நம் முந்தைய பதிவை பார்க்க இங்கு சொடுக்கவும்.
http://winmani.wordpress.com/2010/05/02/onliceocr/
வின்மணி சிந்தனை
வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.


TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நமக்கு கிடைத்த தொன்மையான இசை நூல் எது ?
2.டைபர் நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
3.பதஞ்சலி முனிவரின் மற்றொரு பெயர் என்ன ?
4.பெண்ணின் பெருமை என்ற நூலின் ஆசிரியர் யார் ?
5.1994-ல் உலககோப்பை கால்பந்து போட்டியில் வென்ற
 நாடு எது ?
6.கரும்புச்சாற்றில் உள்ள சர்க்கரைக்கு என்ன பெயர் ?
7.ஜெராஸ்டிரியர்களின் புனித நூல் எது ?
8.சூரிய பகவானின் தாயார் யார் ?
9.மாஸ்கோ எந்தக் கண்டத்தில் உள்ளது ?
10.அதியமான் எந்த நாட்டை ஆண்டு வந்தார் ?
பதில்கள்:
1.திருக்குறள், 2.ரோம்,3.ஆத்ரேயர், 4. திரு.வி.க,
5. பிரேசில், 6.சுக்ரோஸ்,7.ஜெண்ட் அவஸ்தா, 8.அதிதி,
9.ஐரோப்பா.10.தகடூர்.


இன்று நவம்பர் 17 
பெயர் : சி. இலக்குவனார் ,
பிறந்த தேதி : நவம்பர் 17, 1909
தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.
மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி,
சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு
பொருள்களில் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

திருக்குறள்

4 comments:

 1. ரொம்ப பயனுள்ள தகவல் சார்! மிக்க நன்றி!

  ReplyDelete
 2. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. how are you I was fortunate to seek your website in
  your subject is terrific
  I get a lot in your blog really thank your very much
  btw the theme of you blog is really quality
  where can find it

  ReplyDelete
 4. @ bet365
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad