நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதை விட அதன் பராமரிப்பு செலவு
தான் அதிகமாக இருக்கும். கார் ரிப்பேர் என்று வந்துவிட்டால் என்ன
பிரச்சினை என்பதை உடனடியாக அறிந்து கொள்வதற்கு வசதியாகவும்
அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றியும் வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்ப்பதிவு.

[caption id="attachment_4035" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

எங்கோ வெளியூர் காரில் செல்ல வேண்டி இருக்கிறது இடையில்
வாகனம் சிறியப் பிரச்சினைக்காக நின்றால் நம் நேரம் வீணாகும்
இதற்காக நாம் மெக்கானிக் படிக்க செல்ல வேண்டாம் இணையதளத்தின்
மூலம் நான்கு சக்கர வாகனங்களில் நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின்
நிறுவனம் மற்றும் மாடல் தேர்ந்தெடுத்து இதில் அடிக்கடி ஏற்படும்
பிரச்சினை என்ன என்பதையும் அதற்கு தீர்வையும் வீடியோவுடன்
பார்க்கலாம். சாதரன கார் பெல்ட் மாற்றுவதில் இருந்து இன்ஜின்
மாற்றுவது வரை அனைத்தையும் எந்த ஒளிவும் மறைவுமின்றி
வீடியோவுடன் சொல்லிகொடுக்கிறது.

இணையதள முகவரி : http://www.vehiclefixer.com

இந்ததளத்திற்கு சென்று நாம் பயன்படுத்தும் வாகனத்தை
தேர்ந்தெடுத்துக் கொண்டு Submit என்ற பொத்தானை அழுத்தவும்.
அல்லது உங்கள் வாகனத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வை
இந்தததளத்தில் சென்று தேடவேண்டியது தான் இந்தப்பழுதை
தீர்க்க எவ்வளவு நேரம் என்பதையும் வீடியோ மூலம் பார்த்து
தெரிந்து கொள்ளலாம். ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பிரச்சினைக்கு
தீர்வுக்கான வீடியோ இந்ததளத்தில் இடம் பெற்றுள்ளது. சிறிய
பிரச்சினையாக இருந்தால் நாமே சரி செய்து கொள்ளவும்
வசதியாக இருக்கும். நம் மெக்கானிக் நண்பர்களுக்கு இந்தப்பதிவு
கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை.


வின்மணி சிந்தனை
நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உணவாகப் பயன்படும் பாசி எது ?
2.உலகில் மிகப்பெரிய உப்பு நீர் வாவி எது?
3.வறண்ட நிலத்தாவரம் எது ?
4.ஓட்டக்கூத்தர் எழுதிய நூல் எது ?
5.போலியோ எந்த வகை நோயைச்சார்ந்தது ?
6.உலகிலேயே உயரமான தாவரம் எது ?
7.தாவரங்களில் பாலி சாக்ரைடுகள் சேமித்து வைத்திருப்பது எது?
8.பறக்கும் அணில்கள் எங்கு காணப்படுகின்றன ?
9.கறுப்பு சிலந்தியின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் ?
10.வாசிகா மருந்து குணப்படுத்தும் நோய் எது ?
பதில்கள்:
1.போர்பைரா, 2.காஸ்பியன் கடல்,3.கள்ளி, 4.தக்கயாகப் பரணி,
5.வைரஸ், 6.செக்கோயா,7. ஸ்டார்ச்சு, 8.வட இந்தியக்
காடுகளில்,
9.25 ஆண்டுகள்.10.நுரையீரல் சம்பந்தமான நோய்.

இன்று நவம்பர் 18  
பெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை,
மறைந்ததேதி : நவம்பர் 18, 1936

கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு
உரிமையோடு விளங்க வேண்டுமென்றால்
முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்
இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க
வேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

7 comments:

 1. Superb sir,Thank you very much

  ReplyDelete
 2. @ delavictoire
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. சிறப்பான வீடியோ

  ReplyDelete
 4. @ jiyath
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. I AM CAR MECHANIC STUDY IN DME

  ReplyDelete

 
Top