சொல்லக்கூடிய அரட்டை அடிக்க கூகுள் டாக் , யாகூ மெசஞ்சர் போன்ற
மென்பொருட்களை தங்கள் கணினியில் தரவிரக்கியும் ஒரு புதிய
பயனாளர் கணக்கு உருவாக்கியும் பயன்படுத்துகின்றனர் ஆனால் எந்த
பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட் செய்யலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_3994" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
எந்த ஒரு பயனாளர் கணக்கு இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக நம்
நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் அரட்டை அடிக்க நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://tinychat.com
[caption id="attachment_3995" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்க்குள்
பிடித்த பெயரில் உங்களுக்கென்று ஒரு சாட் ரூம் தட்டச்சி செய்து
Create என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரை
படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது இதில் Myspace,Twitter or Facebook இதில்
எந்த ஒரு கணக்கையும் பயன்படுத்தலாம் அல்லது Don't have one என்று
இருக்கும் கட்டத்திற்குள் பெயரை கொடுத்து Go என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் உங்கள் செல்லப்பெயரை
கொடுத்து உங்கள் உரையாடலை வேறு யாரும் பார்க்கலாமா
வேண்டாமா என்பதற்கு Allow others to broadcast என்பதில் Yes
அல்லது No என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் இனி நாம் சாட் செய்ய தொடங்கலாம். நண்பர்களுக்கு
நாம் ரூம் உருவாக்கிய சாட் முகவரியை அனுப்பலாம் உதாரணமாக
நாம் http://tinychat.com/winmani என்று உருவாக்கியுள்ளோம் இதே
போல் நாம் விரும்பும் பெயரிலும் உருவாக்கி சாட் செய்யலாம்.
[caption id="attachment_3996" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]
மற்ற தளங்களை விட இந்ததளத்தில் நாம் ஆடியோ மட்டுமல்ல
வீடியோ சாட்டிங்கும் செய்து கொள்ளலாம். அலுவலங்களிலும் மற்ற
சில இடங்களிலும் சாட் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.செயற்கை சாயங்களை கண்டுபிடித்தவர் யார் ?
2.ஆஸ்திரேலியா நாட்டின் விமான சர்வீஸின் பெயர் என்ன ?
3.மிகப்பெரிய அணுஉலை எந்த நாட்டில் உள்ளது ?
4.இரயில் போக்குவரத்து இல்லாத நாடு எது ?
5.உலகில் பூச்சி மருந்துகள் அதிகம் உபயோகிக்கும் நாடு எது?
6.லாத்வியா நாட்டின் தலைநகரம் எது ?
7.சர்வதேச நதி என்று எதை அழைக்கின்றனர் ?
8.ஒற்றை தடவாளத்தின் மீது செல்லும் இரயிலுக்கு என்ன
பெயர் ?
9.ஒவியர்கள் அதிகமாக பயன்படுத்தும் வண்ணம் எது ?
10.இந்திய தேசிய கீதம் எத்தனை வினாடிகளுக்குள் பாடி
முடிக்க வேண்டும் ?
பதில்கள்:
1.வில்லியம் பெர்கின்ஸ், 2.குவான்டர்ஸ்,3.பிரான்ஸ்,
4.ஆப்கானிஸ்தான், 5.இந்தியா,6.ரிகா,7.ரைன் நதி,
8.மோனோ இரயில், 9.சிவப்பு.10.52 வினாடிகள்.
இன்று நவம்பர் 15
பெயர் : வில்லியம் ஹேர்ச்செல் ,
பிறந்த தேதி : நவம்பர் 15, 1738
ஜேர்மனியில் பிறந்த பிரிட்டானிய வானியலாளர்
யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தமைக்காகச்
சிறப்புப் பெற்றார்.இது தவிர அகச்சிவப்புக் கதிர்
போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை
உலகிற்குத் தெரிவித்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
ஆம், உள்ளே சென்று பார்த்தேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.....
@ முத்துவேல்
ReplyDeleteநன்றி