யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, October 4, 2010

யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.

எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக யூடியுப் வீடியோவை எந்த
ஃபார்மட்டுக்கும் தகுந்தாற் போல் மாற்றி நம் கணினியில் சேமிக்கலாம்
எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3516" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

தினமும் யூடியுப் வீடியோவை தரவிரக்க ஒரு இணையதளம் வந்து
கொண்டு இருந்தாலும் பல தளங்களில் அதிகமான விளம்பரங்களாலும்
யூடியுப் வீடியோவை மாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வதாலும் நாம்
பயன்படுத்தாமல் இருக்கிறோம் இந்தப் பிரச்சினைகளை சரி செய்யும்
விதமாக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.downloadtube.org

[caption id="attachment_3517" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் URL என்ற
கட்டத்திற்குள் யூடியுப் முகவரியை கொடுக்கவும் அடுத்து எந்த
ஃபார்மட் ( Format ) மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு
[  Windows (.mpg) ,  Flash (.flv) ,  Mac (.mov) , Audio Only (.mp3) ,
Mobile (.3gp) ,  iPod/PSP/iPhone (.mp4)  ]
Convert and Download என்ற பொத்தானை அழுத்தவும் சிறிது நேரத்தில்
படம் 2-ல் இருப்பது போல் வரும் அதில் நாம் Download என்ற
பொத்தனை அழுத்தி நம் கணினியில் எளிதாக சேமித்துக்கொள்ளலாம்.
எந்த விளம்பரமும் இல்லாமல் முகப்பு பக்கம் எளிமையாகவும்
சேவைத் தரத்துடனும் உள்ளது. கண்டிப்பாக இந்த தளம் யூடியுப்
வீடியோவை நாம் விரும்பும் ஃபார்மட் -ல் நம் கணினியில் சேமிக்க
உதவும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதும் , புகழ்வதும் ஆசை
துறந்தவனுக்கு இருப்பதில்லை.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த நதிக்கரையில் லக்னோ நகர் உள்ளது ?
2.பூட்டானின் தலைநகர் எது ?
3.கிராம்புத் தீவு எது ?
4.உயரமான மிருகம் எது ?
5.இந்தியாவுக்கு வந்த முதல் சீன யாத்தீகர் யார் ?
6.ரிவால்வரை கண்டுபிடித்தவர் யார் ?
7.சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
8.இன்சுலின் மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
9.ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு எது ?
10.இந்தியாவிலுள்ள பெரிய ஏரி எது ?
 
பதில்கள்:
1.கோமதி , 2.திம்பு,3.சான்ஸிபார், 4.ஒட்டகச் சிவிங்கி,
5.பாகியான், 6.சாமுவேல் கோல்ட்,7.இராசகோபாலச்சாரியார்,
8.பாண்டிங் (1932), 9.கிரிக்கெட் ,10.உலர் ஏரி (காஷ்மீர்).

இன்று  அக்டோபர் 4
பெயர் :
திருப்பூர் குமரன்,
பிறந்த தேதி :
 அக்டோபர் 4,1904
சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
தொடங்கிய போது அறவழியில் சென்ற
குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
இந்திய தேசியக் கொடியை கையில்
வைத்துக்கொண்டே உயிர் துறந்தார். நம் நாடு இன்று
 உமக்காக தலை வணங்குகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

14 comments:

  1. I tried it . You have to register with your e mail . The price is UDS 9.12 pm. It is not free I think.

    ReplyDelete
  2. @ LVISS
    சற்று விரிவாக கேழுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  3. @ ♠புதுவை சிவா♠
    நண்பருக்கு நன்றி

    ReplyDelete
  4. keepvid.com/ also one of downloading site. it is very usefull.

    ReplyDelete
  5. @ ஜெகதீஸ்வரன்
    நன்றி

    ReplyDelete
  6. @ ravikumar
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. இதைப் பயன்படுத்தி நீங்க எந்த விடியோவையாச்சும் தரவிறக்கம் பண்ணியிருக்கிறீர்களா? இதை இலவசமா பயன்படுத்த முடியாது, காசு கேட்குது.

    ReplyDelete
  8. @ Jayadev
    நண்பருக்கு ,
    தரவிரக்கம் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் ஆகிறது , பயன்படுத்திப் பார்த்தபின்
    தான் தகவல் தெரிவித்திருக்கிறோம். மறுபடியும் ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள்.
    நன்றி

    ReplyDelete
  9. Easy Youtube Video downloader Addon for FireFox will help to download the videos with ease.

    This is free and easy to use.

    https://addons.mozilla.org/en-US/firefox/addon/10137/

    ReplyDelete
  10. @ dhana
    மிக்க நன்றி

    ReplyDelete
  11. it is very usefull in the genral konwledge

    ReplyDelete
  12. மிக்க நன்றி! நண்பரே.......!

    ReplyDelete

Post Top Ad