கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, October 3, 2010

கூகுள் டிவி- யில் டிவிட்டர், ஃபிளிக்கர் பயன்படுத்தலாம் சிறப்பு பதிவு வீடியோவுடன்

கூகுள் டிவி -யில் டிவிட்டர் , பிளிக்கர், நெட்பிளிக்ஸ், சிஎன்பிசி
பயன்படுத்தலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்கால் வைத்த இடமெல்லாம் வெற்றி தான் என்று சொல்லும் அளவிற்கு
குறுகிய காலத்தில் இமாலய வெற்றியைப் பெற்றிருக்கும் கூகுளின்
அடுத்த பிரம்மாண்ட வெளியீடாக வர இருப்பது கூகுள் டிவி. இந்த
கூகுள் டிவி -யின் சிறப்ம்சம் என்னவென்றால் நாம் எந்த டிவி அல்லது
டிஷ் பயன்படுத்தினாலும் சேனல் லிஸ்ட் மூலம் தான் ஒவ்வொரு
தொலைக்காட்சி சேனலின் புரோகிராமும் தெரிந்து கொள்ள முடியும்
ஆனால் நம் கூகுள் தொலைக்காட்சியில் எந்த புரோகிராம் என்பதின்
பெயரை தட்டச்சு செய்தாலே போதும் உடனடியாகத் தேடி நமக்கு காட்டும்.கூகுள் டிவி தற்போது  லாஜிக்டெக் நிறுவனத்துடன் இணைந்து
Logitech’s Google TV  அறிமுக விழாவை வரும் அக்டோபர் 6 தேதியும்
சோனி நிறுவனத்துடன் இணைந்து Sony’s  Google TV   என்பதை வரும்
அக்டோபர் 12 -ம் தேதியும் வெளியீட இருக்கிறது. கூகுள் டிவி
பார்ப்பதற்கு இந்த தொலைக்காட்சி கட்டாயம் வேண்டும் என்பதில்லை
தனியாக கிடைக்கும் கூகுள் பாக்ஸ் கொண்டும் நாம் கூகுள் டிவி
பார்க்கலாம். கூகுள் டிவியின் மற்றொரு சிறப்பம்சமாக வெளிவருவது
கூகுள் குரோம் உலாவி , யூடியுப் , டிவிட்டர், ஃபிளிக்கர் , அமேசான் ,
விக்கீப்பிடியா, கூகுள் மேப்ஸ், நெட்பிளிக்ஸ் மற்றும் சிலவகை
அப்ளிகேசன்களையும் செய்தித் தளங்களையும் பார்க்கலாம்.
விரும்பிய தளங்களை புக்மார்க் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது.
இதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.


வின்மணி சிந்தனை
மொழிக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை ,
மொழியை திறம்பட பேசுபவன் பேச்சாளன் ,
அறிவை திறம்பட பயன்படுத்துபவன் விஞ்ஞானி
.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மிளகு அதிகமாக விளையும் இந்திய மாநிலம் ?
2.ஏழைமக்களின் பசு என்று அழைக்கப்படுவது எது ?
3.திருக்குறள் எவ்வகை நூலைச் சேர்ந்தது ?
4.வால்மீகி இராமாயணத்தில் எத்தனை காண்டம் உள்ளது ?
5.தமிழ்க் கடவுள் என்பது எந்தக்கடவுளைக் குறிக்கும் ?
6.சைப்ரஸ் எந்தக்கண்டத்தை சேர்ந்த நாடு ?
7.உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு எது ?
8.உப்புத்தன்மை குறைந்த கடல் எது ?
9.மனிதக்காது எத்தனை பகுதிகளாக அமைந்துள்ளது ?
10.எலும்புகளின் துணையின்றித் தானே அசையும் இயங்கு
தசை எது ?  

பதில்கள்:
1.கேரளம், 2.ஆடுகள்,3.பதினெண் கீழ்க் கணக்கு நூல்,
4.ஏழு, 5.முருகக் கடவுள்,6.ஆசியா,7.நவ்ரு , 8.பால்டிக் கடல்,
9. 3 பகுதி, 10. நாக்கு.

இன்று அக்டோபர் 3 
சிறப்பு நாள் : உலக வசிப்பிட நாள்
உலகில் வசிப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு
இடமாக நாளும் நகரும் மக்களைப் பற்றிய
விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துக்காட்டும்
நாளாகவும்,வசிப்பிடத்தின் அவசியத்தை பேணும்
தினமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

Post Top Ad