குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, October 5, 2010

குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி

அலைபேசிகளில் எஸ்எம்எஸ் என சொல்லப்படும் குறுஞ்செய்திகளை
மேலும் சுருக்கி அனுப்பலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

 

[caption id="attachment_3526" align="aligncenter" width="276" caption="படம் 1"][/caption]

 

அலைபேசிகளில் குறுஞ்செய்தி (SMS) கல்லூரி மாணவர்களிடையே
பெரும் வரவேற்பை பெற்று இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
அதுவும் இலவச குறுஞ்செய்தி என்றால் உடனடியாக யாருக்காவது
எதாவது செய்தி அனுப்பி கொண்டே இருப்போம் ஆனால் இந்த
குறுஞ்செய்தியை மேலும் சுருக்கி எளிதாக அனுப்பலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.transl8it.com

 

[caption id="attachment_3527" align="aligncenter" width="266" caption="படம் 2"][/caption]

 

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் உள்ளது போல் இருக்கும்
கட்டத்திற்குள் நம் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்ய வேண்டும்
தட்டச்சு செய்து முடித்ததும் transl8it! என்ற பொத்தானை அழுத்தவும்
சில நொடிகளில் நாம் கொடுத்த குறுஞ்செய்தி மேலும் சுருக்கப்பட்டு
படம் 2-ல் காட்டியபடி இருக்கும்.  இந்த தளத்தில் இலவசமாக ஒரு
கணக்கு உருவாக்கி கொண்டு இந்த குறுஞ்செய்தியை அலைபேசிக்கு
SMS ஆக அனுப்பலாம்.இதே போல் நாம் சுருக்கிய குறுஞ்செய்தியை
"பழையபடி மாற்றுவதற்கு முன்" இருந்த குறுஞ்செய்தியாக மாற்றலாம்.
சில நாட்கள் இந்ததளத்தில் இருந்து ஆங்கில செய்திகளை சுருக்கப்பட்ட
லிங்கோ செய்திகளாக மாற்றினால் நாளடைவில் நாமும் லிங்கோ
செய்தி அனுப்புவதில் திறமையானவர்களாக மாறலாம்.
வின்மணி சிந்தனை
அடுத்தவரின் பணத்தை கொள்ளையடித்து சம்பாதிப்பவன்
தன் மனசாட்சியை ஏமாற்றுகிறான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கருப்பு முத்து என்று அழைக்கப்படும் வீரர் யார் ?
2.கலோரி மீட்டர் எதை அளக்கப்பயன்படுகிறது ?
3.ஒளியை மின்சாரமாக மாற்றும் கருவியின் பெயர் என்ன ?
4.ஆசியாவில் மைக்கா அதிக அளவில் வெட்டி எடுக்கப்படும்
 நாடு எது ?
5.ஆசிய விளையாட்டுப்போட்டிகள் எத்தனை ஆண்டுகளுக்கு
 ஒருமுறை நடக்கும் ?
6.அணு ஆயுத ஒழிப்பு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7.ஜாகர்த்தா எந்த நாட்டின் தலைநகராகும் ?
8.சதி என்ற தீய வழக்கத்தை ஒழித்த கவர்னர் ஜெனரல் யார்?
9.மனித உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன ?
10.வெள்ளை நைல் நதியும் நீல நைல் நதியும் சேரும் இடம் எது?
பதில்கள்:
1.பீலே, 2.வெப்பத்தின் அளவு,3.போட்டோ செல், 4.இந்தியா,
5.4 ஆண்டு, 6.கி.பி.1958,7.இந்தோனேஷியா,
8.வில்லியம் பெண்டிங் பிரபு, 9.72,000 நரம்புகள்,10.கார்டம்.

இன்று  அக்டோபர் 5 
பெயர் : இராமலிங்க அடிகள்,
பிறந்த தேதி : அக்டோபர் 5,1823
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க
அடிகளார் ஓர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார்.
மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தவர்.
சன்மார்க்க சிந்தனையாளர்.அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை என்று எல்லா மதங்களையும் விட்டு
தனித்து இருந்தவர். இவருடைய சிந்தனைகள் தற்போது
வேகமாக உலகெங்கும் பரவிவருகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

 1. Thanks winmani

  it is very funny read after the transl8it! sms

  :-)

  "ஒரு
  கணக்கு உருவாக்கி கொண்டு இந்த குறுஞ்செய்தியை அலைபேசிக்கு
  SMS ஆக அனுப்பலாம்."

  it is a free of cost ??

  ReplyDelete
 2. @ ♠புதுவை சிவா♠
  ஆம் இலவசம் தான்.
  நன்றி

  ReplyDelete
 3. போட்டோ செல், என்பது ஒளியின்மூலம் இயங்கும் ஆகம நிகம எந்திரம் என்று கேட்டுஇருக்கிறேன் அது ஒளியை மின்சாரமாக மாற்றுமா?இயன்றால் விளக்கம்தரவும்.

  ReplyDelete
 4. @ hameed
  விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
  நன்றி

  ReplyDelete

Post Top Ad