இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, January 7, 2011

இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.

உலக இசை வல்லுனர்கள் உருவாக்கும் அழகான மற்றும் மனதை
மயக்கும் ரிங்டோன் ( Ringtone ) -ஐ இலவசமாக ஆன்லைன் மூலம்
தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


இசைப்பிரியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இசையின் மீது
ஒரு நாட்டம் இயற்கையாகவே இருக்கும். இசை மொழிகளை
தாண்டியது என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபிக்க உதவியாக
ஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்தில் உலக இசை வல்லுனர்கள்
அனைவரின் சிறந்த ரிங்டோனும் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

இணையதள முகவரி : http://toneshared.com

இந்ததளத்திற்கு சென்று நாம் நமக்கு உலக அளவில் விரும்பிய
இசைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொடுத்திருக்கும்
இசையை எளிதாக ரிங்டோனாக இலவசமாக தரவிரக்கலாம்.
ஒவ்வொரு கலைஞர்களின் இசைக்கும் ஒவ்வொரு தளமாக
சென்று தேடாமல் ஒரே தளத்தில் இருந்து கொண்டு அனைத்து
பிரபலமான இசைக்கலைஞர்களின் இசையையும் ஆன்லைன்
மூலம் Play செய்து கேட்கலாம், தரவிரக்கலாம். இசைப்பிரியர்கள்
மட்டுமல்லாது அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.





வின்மணி சிந்தனை
நம் வாயில் இருந்து வரும் வார்த்தை அடுத்தவர் மனதை
காயப்படுத்தினால் நமக்கு மன அமைதி கிடைக்காது.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தேனியின் கூட்டுக்கண்களில் எத்தனை விழிலென்சுகள் உள்ளது?
2.இந்தியக்கடற்கரையின் மொத்த நீளம் என்ன ?
3.எந்தப்பூனை இனத்திற்கு வால் கிடையாது ?
4.கூடைப்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது ?
5.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள லிங்கத்திருவுருவம்
எத்தனை அடி உயரம் கொண்டது  ? 
6.முதன் முதலில் பருகும் சோடா விற்பனைக்கு வந்தது
 எப்போது?

7.சிறுத்தை வாயின் சராசரி நீளம் என்ன ?
8.அகல்விளக்குகள் உருவான ஆண்டு எது ?
9.ஒன்பது கிரகங்களுக்கும் கோவிலாக உள்ள இடம் எது ?
10.அக்பர் எந்த ஆண்டு இறந்தார் ?
பதில்கள்:
1.சுமார் 12,000 விழி லென்சுகள்,2.6000 கி.மீ,3.இங்கிலாந்தில்
உள்ள
மான்கள் என்ற பூனை இனத்திற்க்கு,4.ஸ்வீடன் ,
5.13 அடி,6.1812-ல்,
7.60 செ.மீ,8.கி.மு.900.9.குவாதி,
10.கி.பி.1605.



இன்று ஜனவரி 7 
பெயர் : நிக்கோலா தெஸ்லா ,
மறைந்த தேதி : ஜனவரி 7, 1856
இவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப்
பொறியாளரும்,
மின்பொறியாளரும் ஆவார்.
19 ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும்,20 ஆம்
நூற்றாண்டின்
தொடக்கத்திலும் மின்னியல்,
காந்தவியல் ஆகிய
துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான
பங்களிப்புக்களினால்
மிகவும் புகழ் பெற்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. வணக்கம் நண்பரே!
    புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி.
    - தமிழ்புக்மார்க் குழு

    (தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

    ReplyDelete
  2. @ தமிழ்புக்மார்க்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad