வேகத்தை அதிகரிப்பது எப்படி ( How to increase Google Chrome Speed )
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4597" align="aligncenter" width="100" caption="படம் 1"][/caption]
[caption id="attachment_4598" align="aligncenter" width="281" caption="படம் 2"][/caption]
எளிமையான உலாவி , வேகமான உலாவி என்றெல்லாம் பெயர்
வாங்கிய கூகுள் குரோம் உலாவியில் வேகத்தை அதன் Settings -ல்
சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம். நாம் குரோம்
உலாவியில் இணையதள முகவரி கொடுத்து சில நொடிகள் ஆனபின்
தான் செயல்பட ஆரம்பிக்கும் அதே போல் பல இணையதளங்கள்
தெரிவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்தப்பிரச்சினையை
எந்த மென்பொருள் மற்றும் Addons உதவியும் இல்லாம் எளிதாக
நாமே குரோம் உலாவியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.
[caption id="attachment_4599" align="aligncenter" width="400" caption="படம் 3"][/caption]
முதலில் குரோம் உலாவியை திறந்து கொண்டு படம் 1-ல் காட்டியபடி
அதன் வலது பக்கம் இருக்கும் Customize and Control என்ற ஐகானை
சொடுக்கவும் வரும் திரையில் படம் 2-ல் உள்ளது போல் Options
என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரை படம் 3-ல்
காட்டப்பட்டுள்ளது. இதில் Under the Hood என்ற Tab -ல் இருக்கும்
Use DNS pre-fetching to improve page load performance என்பது
டிக் செய்யப்படு இருக்கும். இதில் இருக்கும் டிக் மார்க்கை நீக்கிவிட்டு
Close என்ற பொத்தானை அழுத்தியபின் உலாவியை Close செய்துவிட்டு
மீண்டும் Open செய்யவும். இப்போது உங்கள் குரோம் உலாவியின்
வேகம் முன் இருந்ததை விட அதிகமாகி இருப்பதை நாம் கண்கூடாக
உணரலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு குரோம் உலாவி பயன்படுத்தும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அனுபவத்தின் மூலம் கற்கும் பாடம் தான் ஒருவரை
அறிவாளியாக மாற்றுகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உயிர்முடிச்சு என்று அழைக்கப்படுவதன் பெயர் என்ன ?
2.ஆங்கில எழுத்துக்களில் அதிகமாக பயன்படும் எழுத்து எது ?
3.ஆறுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
4.கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார் ?
5.ஜைன மதத்தை நிறுவியவர் யார் ?
6.புகையிலையில் உள்ள நச்சு சத்து எது ?
7.வைரத்தில் அடங்கியுள்ள தாது பொருள் எது ?
8.பருத்தி பயிரிட சிறந்த மண் எது ?
9.நிலையான வெப்பம் கொண்ட உயிரினம் எது ?
10.பூனைக்கு மொத்தம் எத்தனை பற்கள் உள்ளது ?
பதில்கள்:
1.முகுளம்,2.E,3.பஞ்சாப்,4.பாஸ்கர்,5.மகாவீரர்,6.நிகோடின்,
7.கரி,8.கரிசல் மண்.9.காகம், 10.30 பற்கள்.
இன்று ஜனவரி 6
பெயர் : ஏ. ஆர். ரகுமான் ,
பிறந்த தேதி : ஜனவரி 6, 1966
புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர்.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா
திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக
அறிமுகமானார்.இந்தி, தமிழ், ஆங்கிலம்
மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர்
இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்
விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது
போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
thangalin anaiththu pathivukalum payanullathu.
ReplyDeleteChrome speed increase trick ku nanri
தகவலுக்கு நன்றி
ReplyDeleteநல்ல ட்ரிக் மிக்க நன்றி!
ReplyDelete@ Rajasurian
ReplyDeleteமிக்க நன்றி
@ எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி
thanks
ReplyDeleteமிக உபயோகமான குறிப்பு
ReplyDeleteநன்றி!
ஆஸ்கார் விருதை விட்டுடிங்க ? :)
ReplyDeleteஏன் ?
அதிகம் பேர் உபயோகப்படுத்தும் உலாவியின் வேகத்தை அதிகப்படுத்தும் வழிமுறையை தந்ததற்கு நன்றி..!! :)
ReplyDelete@ Devarajan
ReplyDeleteமிக்க நன்றி
பயனுள்ள பல தகவல்களுக்கு நன்றி.
ReplyDelete@ neelavannan
ReplyDeleteமிக்க நன்றி