கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, January 18, 2011

கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.

கணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்
மால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்
பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



கணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக
இருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.
உலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்
இது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட
வந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்
அடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.filehippo.com/download_ccleaner/

இந்த தளத்திற்கு சென்று CCleaner மென்பொருளின் புதிய பதிப்பை
இலவசமாக தரவிரக்கி கொள்லலாம். மென்பொருளை இயக்கி
நம் கணினியில் தேவையில்லாமல் இயங்கும் ஸ்பைவேர்
மற்றும் மால்வேர் போன்றவற்றை எளிதாக நீக்கலாம். வைரஸ்
நீக்கும் மென்பொருள் பயன்படுத்துவதால் நம் கணினியின் வேகம்
குறைவாக இருக்கும் என்று நினைப்பவர்களும் இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தலாம். கண்டிப்பாக கணினி பயன்படுத்தும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
விசித்திரமான குணம் என்று ஏதும் இல்லை, எல்லாமே
மனிதனின் குணங்களில் ஒன்று தான் பலபேர் அதை
பயன்படுத்துவதில்லை.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ?
2.விடிவெள்ளி என்று அழைக்கப்படும் நட்சத்திரம் எது ?
3.கெளரவர்கள் 100 பேருடன் பிறந்த சகோதிரி யார்  ?
4.சாக்ரடீஸ் எந்த விஷத்தால் கொல்லப்பட்டார் ?
5.உலக எய்ட்ஸ் தினம் எப்போது ?
6.ஓட்டகப்பறவை என்று எதைக் கூறுவார்கள் ?
7.செடியின் எந்தப்பகுதியில் மஞ்சள் கிடைக்கிறது ?
8.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
9.ஒரு செல் தாவரம் எது ?
10.பழங்களில் அதிக ஊட்டசத்து உள்ள பழம் எது ?
பதில்கள்:
1.சீரியஸ்,2.சுக்கிரன்,3.துச்சலை, 4.ஹெம்லாக்,
5.டிசம்பர் 1,6.நெருப்புக்கோழி,7.தண்டு, 8.அமோனியா.
9.கிளாமிடா மோனாஸ்,10. வில்வம்பழம்.


இன்று ஜனவரி 17 
பெயர் : என்.டி.ராமராவ் ,
மறைந்த தேதி : ஜனவரி 18, 1996
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. i like this winmani news.
    all these news good& important news.

    ReplyDelete
  2. Dear sir,

    Today I read dinamalar supplementry computer malar. I am regular reader of ur blog and dinamalar. In that I found out ur article isitraining news..

    ReplyDelete
  3. ஏற்கனவே உபயோகிக்கிறேன்.பயனுள்ள மென்பொருள்.

    ReplyDelete
  4. @ Devarajan
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad