கணினி பயன்படுத்துபவர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உதவும் பீர்பால் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, January 17, 2011

கணினி பயன்படுத்துபவர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் உதவும் பீர்பால்

அக்பரின் அரசபையில் சிக்கலான மற்றும்  பிரச்சினையான நேரத்தில்
உதவுபவர் தான் பீர்பால். நமக்கும் கணினி பயன்படுத்துபவர்களுக்கும்
புராகிராமர்களுக்கும் இதே போல் பிரச்சினை ஏற்படும் போது
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4715" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி ஏற்படும் பல விதமான பிழை
செய்தியை காட்டும் இந்தப் பிழைசெய்தி ஏதானால் ஏற்படுகிறது இதற்கு
தீர்வு என்ன என்பதை நமக்கு எளிமையாக சொல்ல ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி :  http://www.errorkey.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
Search கட்டத்திற்குள் நம் கணினியில் ஏற்படும் பிழை செய்தியின்
எண்ணை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டியது
தான் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த பிழை செய்தி ஏதனால்
ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதையும் விரிவாக கொடுக்கிறது.
கணினி புரோகிராமர்களுக்கு அடிக்கடி ஏற்படும் Database பிரச்சினையை
எளிதாக தீர்க்கவும் இந்ததளம் உதவுகிறது. சில நேரங்களில் கணினி
பழுது பார்க்க வரும் நபர்களிடம் இதேப்போல் பிழை செய்தி வருகிறது
என்ன பிரச்சினை என்றால்  அவர்களுக்கு கூட தெரியாமல்இருக்கலாம்
ஆனால் இந்ததளம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும்
ஒரு தளமாக இருக்கும்.வின்மணி சிந்தனை
குழந்தைகளுக்கு பெரியவர்களிடம் மரியாதையாக இருக்க
கற்றுக்கொடுங்கள் சிறந்த பண்பு என்பதில் இதுவும் ஒன்றுTNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வேளாண்மை பற்றிய உயிரியலின் பெயர் என்ன ?
2.சுட்ட செங்கலை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
3.நமது உடலில் கதிர்வீச்சை அறியும் உறுப்பு எது ?
4.கிட்டப்பார்வையை நிவர்திக்கும்  கண்ணாடி எது ?
5.காயங்கள் வேகமாக ஆறுவதற்கு காரணமாக இருக்கும்
வைட்டமின் எது ?
6.சாத்தான்களின் வேதம் என்ற நூலை எழுதியவர் யார் ?
7.மூன்று சர்வதேச விருதுகள் பெற்ற இந்தியத் திரைப்படம் எது?
8.புனித வெள்ளி அன்று சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதி யார்?
9.சிம்லா ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது ?
10.பொறியாளர் அரசர் என அழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.Agrobiology,2.சிந்து சமவெளி மக்கள்,3.ரத்தம், 4.குழிலென்ஸ்,
5.வைட்டமின் K,6.சல்மான் ருஷ்டி,7.நியூ டில்லி டைம்ஸ்,
8.ஆபிரகாம் லிங்கன்.9.1972,10.ஜாஷகான்.இன்று ஜனவரி 17 
 பெயர் M.G.இராமச்சந்திரன்,
பிறந்ததேதி : ஜனவரி 17, 1917
எம்ஜிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில்
புகழ் பெற்ற மனிதர்.தமிழ்த் திரைப்பட
நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை
தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்
பலரின் இதயங்களில் இன்றும் வாழ்பவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. பகிர்தலுக்கு நன்று

  ReplyDelete
 2. மிகவும் அவசியமான தகவல்!

  ReplyDelete
 3. அன்பு அய்யா,
  உங்களது தளத்தின் சேவை தமிழர் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக உள்ளது, உங்களது சேவையை மனதார பாராடடுகிறேன். மேலும் வளர வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 4. @ எஸ். கே
  நன்றி

  ReplyDelete
 5. @ Arasu
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad