அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, January 19, 2011

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி

ஆங்கிலத்தில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு விளக்கம் தேட
ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் நேரடியாக
விளக்கம் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_4735" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

ஆங்கில வார்த்தைகளில் பல புதுமையான வார்த்தைகள் பார்க்கும்
போது அந்த வார்த்தைக்கான விளக்கத்தை தேடி பல தளங்கள்
செல்வதுண்டு பல தளங்களில் நாம் தேடிய வார்த்தை கிடைப்பதும்
இல்லை இந்த நேரத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.dictionary.hm

இந்தத் தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் எந்த வார்த்தைக்கு விளக்கம் வேண்டுமோ
அந்த வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும் உடனடியாக
நமக்கு அதே திரையில் நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தைக்கான
விளக்கம் சில நொடிகளில் வரும்.  Ajax தொழில்நுட்பத்தில்
இருக்கும் வார்த்தை Catcher என்ற புதிய முறையின் மூலம்
இவர்கள் நேரடியாக தேடிக்கொடுக்கின்றனர். இந்தத்தளத்தில்
நாம் தேடும் வார்த்தைக்கான விளக்கமும் நமக்கு திருப்தி
அளிக்கும் வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக
இந்ததளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.வின்மணி சிந்தனை
ஒருவன் நல்ல வழியில் சென்றால் அணில் கூட உதவி
செய்யும். கெட்ட வழியில் சென்றால் குரங்கு கூட துன்பம்
கொடுக்கும்.TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மின்சாரத்தின் வேகம் என்ன ?
2.உடம்பில் எடை கூட எந்த பழத்தை சாப்பிட வேண்டும் ?
3.உமிழ்நீரில் சுரக்கும் நொதியின் பெயர் என்ன ?
4.கருவில் உருவாகும் முதல் உறுப்பு எது ?
5.பதினான்கு கேரட் தங்கத்தில் சுத்தத்தங்கம் எந்தஅளவு இருக்கும்?
6.கருணைக்கிழங்கு சாப்பிடும் போது நாக்கை அரிக்க செய்யும்
 வேதிப்பொருள் எது ?
7.மனிதனின் தும்மல் வேகம் எவ்வளவு ?
8.புல்லுக்கு பசுமை நிறத்தை கொடுப்பது எது ?
9.சாம்பிராணி எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது ?
10.நியூரான் என்பது என்ன ?
பதில்கள்:
1.மணிக்கு 2,70,000 மைல்,2.வாழைப்பழம்,3.டயலின்,
4.இதயம், 5.59%,6.கால்சியம் ஆக்ஸலேட்,7.160 கி.மீ,
8.க்ளோரோஃபில்.9.தேவதாரு மரத்தின் பாலில்,10.நரம்புத்திசு.இன்று ஜனவரி 19 
பெயர் : ஓஷோ ,
மறைந்த தேதி : ஜனவரி 19, 1990
இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள்
ஒருவர்.சிறந்த பேச்சாளர்.ஆங்கிலத்திலும்
இந்தியிலும் பல சொற்பொழிவு நிகழ்த்தி
உள்ளார். புத்தர்,கிருஷ்ணர்,குரு நானக்,
இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற ஞானிகளிடம்
மிகுந்த ஈடுபாடு உள்ளவர். நேர்மை துணிவு மிகுந்தவர்.
அன்பானவர். தியானத்தில் பல புதுவழியை கண்டறிந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

 

7 comments:

 1. நல்லதொரு டிக்சனரி. நீங்கள் இலகுவாக வேட்பிரஸ்க்கான இன்ட்லி ஓட்டளிப்பு பட்டையை நிறுவவும். இலகுவாக இருக்கும்.
  http://ta.indli.com/static/add-indli-voting-widget-wordpress-tamil

  ReplyDelete
 2. Thank you very much. It is very needful for us!

  ReplyDelete
 3. @ jiyath
  சில காரணங்களுக்காக இணைக்காமல் இருக்கிறோம் , விரைவில் இணைக்கிறோம்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. @ ♠புதுவை சிவா♠
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad