ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, December 19, 2010

ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.

ஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்
Lower Case ( சிறிய எழுத்து ) - க்களை எளிதாக மாற்றலாம்.
மைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case
மற்றும் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_4358" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

ஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்
சரியான இடத்தில் Upper case  மற்றும் Lower Case எழுத்துக்கள்
இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்
பல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை
இந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்
Case Converter உதவுகிறது.

இணையதள முகவரி : http://caseconverter.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கில
எழுத்துக்களை (Paste) கொடுத்து அதன் பின் Upper case , Lower Case
அல்லது Proper Case , Sentence Case வேண்டுமோ அதை
சொடுக்கினால் போது உடனடியாக் நாம் மாற்ற சொன்னதற்கு
மாறி நம் நேரத்தை மிச்சப்படுத்தும். அலுவலகத்தில் வேலை
செய்யும் நபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
இறைவன் மேல் நம் பாரத்தை போட்டு செய்யும் செயல்களில்
வெற்றி நிச்சயம்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நம் தலையில் எத்தனை எலும்புகள் இருக்கின்றது ?
2.எந்த மிருகத்திற்கு குரல் கிடையாது ? 
3.சோளம் முதலில் பயிரிடப்பட்ட நாடு எது ? 
4.காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் வாயு உள்ளது ? 
5.உலக அதிசயங்களில் மிகவும் பழமையானது எது ?
6.தங்கவாசல் பாலம் எங்கே இருக்கிறது ? 
7.ஜி.டி. நாயுடு பிறந்த ஊர் எது ? 
8.இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதை  முதலில்
 பெற்றவர் யார் ?
9.மாணிக்க வாசகர் கட்டிய கோவில் எது ?
10.இந்திய தபால் தலை முதன் முதலில் எப்போது எங்கு
 வெளியீடப்பட்டது ?
பதில்கள்:
1.22 எலும்புகள்,2.ஒட்டகச்சிவிங்கி,3.இந்தியா,
4.80 சதவீதம், 5.எகிப்து பிரமிடு,6.அமெரிக்கா சான்
பிரான்ஸிஸ்கோ, 7.கலங்கல், 8.சுவாமி ரங்கநாதானந்தா,
9.ஆவுடையார் கோவில்,10.கராச்சி 1825.


இன்று டிசம்பர் 19 
பெயர் : பிரதிபா பாட்டில் ,
பிறந்த தேதி : டிசம்பர் 19, 1934
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத்
தலைவரும் இந்தியாவின் முதலாவது
பெண் குடியரசுத் தலைவரும் ஆவார்.இந்திய
தேசியக்
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.மும்பையில் உள்ள
அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று
வக்கீலாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி!

    ReplyDelete
  2. @ எஸ்.கே
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad