இணையதளங்களை விட அந்த கேள்விக்கு சரியான பதில்
கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று என்னும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
தேடுபொறியில் சாதாரண கேள்வி கேட்டால் கூட மிகப்பெரிய
அளவிற்கு பதிலும் விளம்பரமும் உள்ள இணையதளங்களை
சேர்த்தே கொடுக்கிறது எந்த பதில் சரியாக இருக்கும் என்று
தேடக்கூட நாம் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது
இந்த சுமையை குறைப்பதற்காகக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.snappyfingers.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்குள்
நம் கேள்வியை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்கும்
கூடவே பதில் இருக்கும் இணையதளமும் சேர்த்தே கிடைக்கும்.
பதிலுடன் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
அந்த தளத்தைச் சொடுக்கி மேலும் பல விபரங்கள் தெரிந்து
கொள்ளலாம். அடிக்கடி நமக்கு எழும் பல கேள்விகளுக்கான
விடை முதலில் தெரிவதும் இத்தளத்தின் சிறப்பு. கண்டிப்பாக
ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவருக்கு நாம் செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும்
உதவி தான், உதவியின் பலன் மொத்தமாக கிடைக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.புல்லி என்ற சொல் பயன்படுத்தப்படும் விளையாட்டு எது ?
2.தீபெத்தை ஆண்ட மதத்தலைவர் யார் ?
3.லெபனான் நாட்டு தலைநகர் எது ?
4.பெளத்தர்களின் புனித மொழி எது ?
5.தீரன் வாஞ்சி சுட்டுக்கொன்ற ஆங்கிலேய கலெக்டர் பெயர் ?
6.தாதா சாகேப் பால்கே விருது முதன் முதலில் யாருக்கு
வழங்கப்பட்டது ?
7.ஐக்கிய நாடு சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
8.இந்திய தேசிய படை (INA) பற்றி விசாரணை எந்த நாட்டில்
நடந்தது ?
9.ட்யூஸ்(Deuce) என்ற சொல் எந்த விளையாட்டுடன்
தொடர்புடையது ?
10.தெந்துருவத்தை அடைந்த முதல் மனிதர் யார் ?
பதில்கள்:
1.ஹாக்கி,2.தலாய் லாமா,3.பேரூட், 4.பாலி, 5.ஆஷ்,
6.தேவிகா ராணி, 7.அக்டோபர் 24 , 1945, 8.டெல்லி,
9.டென்னிஸ்,10.அமெண்ட்ஸன்.
இன்று டிசம்பர் 20
பெயர் : ராபர்ட்ஜெ.வான்டிகிராப்,
பிறந்த தேதி : டிசம்பர் 20,1907
இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்
பேராசிரியராகப் பணிபுரிந்தார்.வான்டிகிராப்
மின்னியற்றி என்னும் இயந்திரத்தை
உருவாக்கியவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
மிகவும் அருமை....................
ReplyDeleteமிகவும் பயனுள்ளது! மிக்க நன்றி!
ReplyDeletenalla pathivu anna
ReplyDelete@ அங்கிதா வர்மா
ReplyDeleteமிக்க நன்றி
@எஸ்.கே
ReplyDeleteமிக்க நன்றி
@ shareef
ReplyDeleteமிக்க நன்றி