ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, November 11, 2010

ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.

3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு
இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று
நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக
3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல
நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும்
3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம்
கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே
அதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத்
தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி :  http://www.3dtin.com

3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல்
இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு
சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம்
மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும்
பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ்
வரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக
வரைந்து பழகலாம். சிங்கையில் இருந்து தோழி கிருஷ்ணவேணி
அவர்கள் 3D-ல் படம் வரைய கற்றுத்தரும் இணையதளம் பற்றி
1 மாதத்திற்கு முன் கேட்டிருந்தார் அவருக்கும் 3D பற்றி அறிய
விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.


வின்மணி சிந்தனை
அடுத்தவரைப் பற்றி குறை கூறும் மனிதனிடம் இருந்து
எப்போதும் விலகி இருப்பது நல்லது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எளிதில் கடத்தி எனப்படும் உலோகம் எது ?
2.ஓராண்டு விண்வெளியில் தங்கிய விண்கூடம் எது ?
3.ரொட்டி நாடு என்று எந்த நாட்டை அழைக்கிறோம் ?
4.ஆலவாய் என்பது எந்த நகரைக் குறிக்கிறது ?
5.நிலவினில் ஓடிய காரின் பெயர் என்ன ?
6.தமிழ் மாதங்களில் 32 நாட்கள் வரும் மாதம் எது ?
7.ரோஜாச் செடியில் இருந்து எடுக்கப்படும் வாசனைத்
திரவியம் எது ?
8.நமீபியாவின் தலைநகரம் எது ?
9.மருணீக்கியார் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
10.சாலர்ஜங் மியூசியம் எங்கே உள்ளது ?
பதில்கள்:
1.தாமிரம், 2.மிர் விண்கூடம்,3.ஸ்காட்லாந்து, 4.மதுரை,
5.லூனார் ரோவர்,6.ஆனி,  7.அத்தர், 8.விந்தோக்,
9.திருநாவுக்கரசர்.10.ஹைதராபாத்.


இன்று நவம்பர் 12 
பெயர் : சுன் இ சியன்,
பிறந்த தேதி : நவம்பர் 12, 1866
தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில்
ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என
இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த
மக்களுக்கான மூன்று கொள்கைகள் சீன அரசியல்
தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

 1. பயனுள்ள தகவல்கள்..! வினா விடைகளும் அருமை..!

  -
  DREAMER

  ReplyDelete
 2. மிகவும் அருமை! நன்றி!

  ReplyDelete
 3. @ HARESH NARAYAN
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. how to connect the home group

  ReplyDelete

Post Top Ad