அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, November 12, 2010

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்.

அமெரிக்காவில் இருந்து உலகின் எந்த நாட்டிற்கும் தபால் மற்றும்
பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்று சில நொடிகளில்
அறிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் உலகில் அனைத்து நாடுகளிலும்
இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களுக்கு தபால் மற்றும் பார்சல் அனுப்ப
எவ்வளவு செலவாகும் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://ircalc.usps.gov/

வேலை செய்யவே நேரம் கிடைப்பதில்லை இதில் தபால் மற்றும் பார்சல்
அனுப்பும் செலவுகளை எப்படி அறிந்து கொள்வது, எதையெல்லாம்
பார்சலில் அனுப்பலாம் எதற்கெல்லாம் வரிவிலக்கு உண்டு என
அனைத்து தகவல்களையும் அள்ளிக்கொடுக்கிறது இந்தத்தளம்.
இந்தத்தளத்திற்கு சென்று நாம் Select a Destination என்பதில் எந்த
நாட்டிற்கு அனுப்ப வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்
அடுத்து தபால் அல்லது பார்சல் எது அனுப்ப போகிறோமோ அதை
தேர்ந்த்தெடுத்துக்கொள்ள வேண்டும் பார்சல் என்றால் அதன்
எடையையும் கொடுத்து Continue என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் அனுப்புவதற்கு ஆகும் செலவு
நமக்கு தெரியும். அமெரிக்காவில் இருந்து தபால் மற்றும்
பார்சல் அனுப்ப விரும்பும் நம் நண்பர்களுக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
தன் கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும் அதிகாரி
பாவத்தையும் , நோயையும் சேர்த்துக்கொள்கிறார்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கப்பல் கட்டுவதில் புகழ்பெற்ற இந்திய நகரம் எது ?
2.சந்திரனில் அதிக குளிர்ச்சியும் அதிக வெப்பமும் காணப்படுவது
 எதனால் ? 
3.வாயுக்களில் அழுத்தத்தை கண்டறிய உதவும் கருவி எது ?
4.யென் என்பது எந்த நாட்டு நாணயம் ?
5.பபூன்குரங்கின் சிறப்பம்சம் யாது ? 
6.வெப்பம் மின்சாரம் இரண்டையும் கடத்தாத பொருள் எது ?
7.தாஜ்மஹால் யார் நினைவாக கட்டப்பட்டது ?
8.ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள் ?
9.நன்றி கூறுவதை கட்டாயமாக்கி இருக்கும் நாடு எது ?
10.இந்தியாவிலே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
பதில்கள்:
1.விசாகப்பட்டிணம், 2.வாயு மண்டலம் இல்லாத காரணத்தால்,
3.மோனோ மீட்டர்,  4.ஜப்பான், 5.வால் கிடையாது,6.மைக்கா,
7.மும்தாஜ், 8.37 ஆண்டுகள், 9.சுவீடன்.10.பெல் (BHELL).


இன்று நவம்பர் 13 
பெயர் : கமால் கமலேஸ்வரன்,
பிறந்த தேதி : நவம்பர் 13, 1934
உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் கமால்
என்று மேற்கத்திய இசைஉலகில் போற்றப்படுபவர்
மேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு
காலம் கோலோச்சி நூற்றுக்கணக்கான
ஆல்பங்களை
பலநாடுகளிலும் வெளியிட்டார். சமீபத்திய
ஆல்பமான
Imagine the World in Unison 2005 இல்
வெளியிடப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

 1. Hello my friend,
  I use feeds to read your blog. unfortunately from last 3/4 days i am getting partial feed only. Could you please feed fully so that readers like me who doesn't have access to blogs in office can read thru web readers and mobile reader.

  ReplyDelete
 2. @ Abbu
  நண்பருக்கு திருட்டுத்தனமாக நம் பதிவுகளை சிலர் நேரடியாக அவர்கள் தளத்தில்
  வெளியீடுகின்றனர் இவர்களுக்காகத்தான் பாதியாக கொடுக்கும் இந்த முயற்சி விரைவில் சரியாகிவிடும் முழுமையாக தெரியும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. சபாஷ் சரியாக அறிந்தேன்.

  ReplyDelete
 4. @ Jiyath
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad