அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_3948" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
புகைப்படத்தை எழுத்தாக மாற்ற பல இணையதளங்கள் வந்து
கொண்டே இருக்கின்றன அந்த வகையில் இன்று புகைப்படத்தை
ASCII ( American Standard Code for Information Interchange) எழுத்தாக
மாற்ற நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://picascii.com
[caption id="attachment_3949" align="aligncenter" width="345" caption="படம் 2"][/caption]
[caption id="attachment_3950" align="aligncenter" width="345" caption="படம் 3"][/caption]
படத்தை எழுத்தாக மாற்றுவது ஒரு பெரிய வேலை தான் என்று
பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் சோசியல் நெட்வோர்க்
-களில் புகைப்படத்தை எழுத்தாக மாற்றி உலாவ விட்டு இருப்பர்
அந்த வரிசையில் இனி நாமும் எளிதாக இந்தத்தளத்திற்கு சென்று
படம் 1-ல் காட்டியபடி Choose என்ற பொத்தானை அழுத்தி விரும்பிய
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அடுத்து எழுத்தின் அளவை
அடுத்த கட்டத்தில் கொடுக்கவும் அடுத்தும் இருக்கும் Check box-ல்
கலருடன் எழுத்து வேண்டும் என்றால் அதையும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு Generate என்ற பொத்தானை அழுத்தவும் சில நொடிகளில்
நாம் கொடுத்த புகைப்படத்தை எழுத்தாக மாற்றி அடுத்து வரும்
திரை காட்டும் அந்த எழுத்தை காப்பி செய்து Notepad-ல் பேஸ்ட்
செய்தாலும் புகைப்படம் அப்படி கருப்பு வெள்ளையுடன் வரும்
புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
உங்களுக்காக வேலை செய்யும் தொழிலாளியுடன்
அன்பு காட்டி தேவையில்லாதவற்றை குறைத்தால்
வேலை நடக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் எத்தனை வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன?
2.பீங்கான் பாத்திரங்களை உருவாக்கியவர் யார் ?
3.ஒரு சிவப்பணு எத்தனை நாட்கள் உயிர் வாழும் ?
4.நாய்க்கடி நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது ?
5.மனிதன் கையிலுள்ள எலும்புகள் எத்தனை ?
6.கங்கை எங்கே போய் சேருகிறது ?
7.ஆப்பிள் கணினியை கண்டுபிடித்தவர் யார் ?
8.ஒரு குழந்தை எத்தனை எலும்புகளுடன் பிறக்கிறது ?
9.நிலத்தில் மெதுவாக நகரும் விலங்கு எது ?
10.குறட்டை விடாமல் தூங்கும் மிருகம் எது ?
பதில்கள்:
1.150, 2.சீனர்கள்,3.115 நாட்கள்,4.நரம்பு மண்டலம்,
5.27,6.வங்காள விரிகுடா, 7.ஸ்டீன் வோஸ்னியா,
8.330, 9.ஸ்லோத்.10.கொரில்லா குரங்கு.
இன்று நவம்பர் 11
பெயர் : லியோனார்டோ டிகாப்ரியோ,
பிறந்த தேதி : நவம்பர் 11, 1974
ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர்.டைட்டானிக்
என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்
பெற்றார். தேர்ந்தெடுத்த சிலப்படங்களில்
நடித்து உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை
கொண்டுள்ளார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
மிக அழகான எளிமையானது! தகவலுக்கு நன்றி!
ReplyDelete@ எஸ். கே
ReplyDeleteமிக்க நன்றி
your work is excellent sir, and also your additional work gk,question and answer very useful. thank you sir...................
ReplyDeleteரொம்ப நல்லா மாறியது.
ReplyDelete@ Jiyath
ReplyDeleteநன்றி
பயனுள்ள் பதிவுகள் தரும் உங்களுக்கு என் நன்றி.
ReplyDeleteதமிழில் எழுதும் முறை google transliterate எப்படி
என் வலைத்தளத்தில் இணைப்பது என் அறிய தரவும் . நன்றி
@ nilaamathy
ReplyDeleteவிரைவில் தெரியப்படுத்துகிறோம்.
நன்றி