செலவு செய்யலாம் என்று சொல்லித்தர ஒரு இணையதளம் உள்ளது.
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆரம்பத்தில் செலவு செய்வதை பயனுள்ள வழியில் செலவு செய்யா
விட்டால் பின் எவ்வளவு தான் முயன்றாலும் பணம் நம் கையில்
இருந்து தண்ணீராக செலவு செய்வதை யாராலும் தடுக்க முடியாது.
குழந்தையாக இருக்கும் போதே பணத்தை எப்படி எல்லாம் பயனுள்ள
வழிகளில் செலவு செய்யலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://zefty.com
இந்தத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளுக்கு புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை
பயனாளர் கணக்கு உருவாக்கியதும் குழந்தைகள் அந்த பயனாளர்
கணக்கின் வழியாக உள்சென்று தங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி
முதல் பிறந்த நாள் போன்ற நாட்களில் கிடைக்கும் பணம் வரை
அத்தனையையும் எப்படி பயனுள்ள வழியில் செலவு செய்யலாம் என்று
எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது. குழந்தைகள் அதிகமாக எதில்
பணம் செலவு செய்கின்றனர் அதை எப்படி எல்லாம் குறைக்கலாம்
என்று படிப்படியாக சொல்லிக்கொடுக்கிறது. கூடவே குழந்தைகளுக்கு
மட்டும் இல்லாமல் பெற்றோர்களும் தங்கள் பணத்தை எப்படி பயனுள்ள
வழியில் செலவு செய்யலாம் என்றும் சொல்லிக்கொடுக்கிறது.
அநாவசியமாக பணம் செலவு செய்ய விரும்பாத நபர்களுக்கு
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பல விதமான
போராட்டங்களை சந்தித்தப்பின் தான் அதை
அடைந்திருக்கிறார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சலவைக்கல் எதிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது ?
2.உள்நாட்டு போக்குவரக்குக்கு அதிகம் பயன்படும் இந்திய
நதி எது ?
3.நாயை விட பல மடங்கு மோப்பசக்தி கொண்ட உயிரினம் எது?
4.பேருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
5.இந்திய மிக நீண்ட கோபுரம் எது ?
6.இந்தியாவின் முக்கிய உணவுப்பயிர் எது ?
7.பாரதிதாசன் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன ?
8.அதிகமான மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் எது?
9.மலேரியா நோயில் எத்தனை வகையுண்டு ?
10.நபிகள் நாயகம் அதிகம் பாசம் வைத்திருந்த அவரது மகள்
பெயர் என்ன ?
பதில்கள்:
1.சுண்ணாம்புக்கல்,2.கங்கை, 3.விலாங்குமீன்,4.கிரிப்டோகிராபி,
5.குதுப்மினார்,6.நெல்,கோதுமை, 7.குயில், நெதர்லாந்து,
8.உ.பி 55 மாவட்டம், 9.3, 10.அன்னை பாத்திமா
இன்று அக்டோபர் 17
பெயர் : கவிஞர் கண்ணதாசன் ,
மறைந்ததேதி : அக்டோபர் 17, 1981
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும்
கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட
கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட
திரைப்படப்பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்
பல எழுதியவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
மிகவும் பயனுள்ள தகவல்.
ReplyDeleteதங்களின் வலைத்தளம் மிகவும் அருமையாக இருக்கிறது. தங்களின் வலைத்தளத்தை வலைச்சரம் தானியங்கை திரட்டியில் சேர்த்துள்ளோம். தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால். எமக்கு தெரிவிக்கவும். நன்றிகள்.
ReplyDelete@ anuya
ReplyDeleteஎந்த ஆட்சேபனையும் இல்லை ,
மிக்க நன்றி