வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, October 18, 2010

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்.

வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க
உதவும் ஒரு இலவச மென்பொருள் பற்றித்தான் இந்தப்பதிவு.

 

[caption id="attachment_3690" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

 

சில வீடியோக்களில் உள்ள ஆடியோ மட்டும் நமக்கு தேவைப்படும்
அப்படி பட்ட நேரத்தில் வீடியோ எடிட்டிங் செய்பவர்களிடம் சென்று
வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்க பணமும்
நேரமும் செலவாகும் ஆனால் இனி எளிதாக நம் கணினி மூலமே
வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டுமல்ல முக்கியமான பிரேம்-ல்
இருக்க்கும் போட்டோவை கூட சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு மென்பொருள் உள்ளது. இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை
சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

தரவிரக்க முகவரி :  http://www.softwareclub.ws/download/scvcs1303.exe

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து மென்பொருளை திறந்ததும் படம் 1-ல் இருப்பது போல் வரும்
இதில் (Step 1) Input video file என்பதில் நாம் மாற்ற விரும்பும் வீடியோ
கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து Play என்ற பொத்தானை
அழுத்தி வீடியோவில் உள்ளதில் எதை புகைப்படமாக சேமிக்க
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து கொண்டு (Step2 ) Save Frame என்பதை
சொடுக்கவும். அடுத்து ( Step 3) -ல் Convert to என்பதில் நாம் மாற்ற
வீடியோ கோப்பை வேறு பார்மட்டுக்கு மாற்ற விரும்பினால் அதை
தேர்ந்தெடுக்கவும். அடுத்து இருக்கும் (step 4) தான் நாம் தேர்ந்தெடுத்த
வீடியோ கோப்பை எந்த ஆடியோ பார்மட்டுக்கு மாற்ற வேண்டுமோ
அதை தேர்ந்த்டுத்துக்கொண்டு ( Step 5) Output video file என்பதில்
நம் கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை
தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின்
( Step 6 ) split என்ற பொத்தானை அழுத்தவும். வீடியோவில்
இருந்து ஆடியோவை வேகமாக பிரிக்க விரும்பும் நண்பர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
தேவையான நேரத்தில் செலவு செய்யாத பணமும்
காலம் கடந்து பெய்யும் மழையும் பயனற்றது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தக்காளிப்பழத்தின் தாயகம் எது ?
2.தரைப்படை வீரர்கள் கல்லூரி முதலில் அமைந்த இடம் எது?
3.மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் யார் ?
4.முதன் முதலாக ஜனநாயக முறை தோன்றியது எந்த நாட்டில்?
5.போலியோ மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
6.குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வதிப்பதில் முதலிடத்தில்
 உள்ள நாடு எது ?
7.’தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கியவர் யார் ?
8.கார்பெட் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
9.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன ? 
10.நவீன பாரளுமன்ற முறையை உருவாக்கிய இங்கிலாந்து
மன்னர் யார் ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.புனே, 3.அரிஸ்டாட்டில்,4.இஸ்ரேல்,
5.ஜோனாஸ் சாக்,ஆல்பர்ட் சாபின்,6.சீனா,7.சி.பா.ஆதித்தனார்,
8.உ.பி, 9.ஜோசப் பெஸ்கி, 10.முதலாம் எட்வட்ர்ட்.


இன்று அக்டோபர் 18
பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன்
மறைந்ததேதி : அக்டோபர் 18, 1931

அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும்
ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை
உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான
வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று
தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு சொந்தகாரர்.
தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு

செய்துள்ளார் எடிசன்

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. மிகவும் பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு தெளிவாகவும் அழகாகவும் விளக்கியுள்ளீர்கள்
    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. k.s.வெங்கடேசனOctober 21, 2010 at 9:27 AM

    வணக்கம் நண்பரே! உங்கள் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. @ k.s.வெங்கடேசன
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு,

    ReplyDelete
  5. @ senthilathiban
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad