ரேபிட்ஷேர் , மெகா அப்லோட் , டெபாசிட்ஃபைல் போன்ற தளங்களுக்கு
தனித்தனியாக சென்று பதிவேற்றம் செய்கிறோம் ஆனால் ஒரே
நேரத்தில் நம் கோப்புகள் அனைத்தையும் மேலே குறிப்பிட்ட அத்தனை
தளங்களிலும் பதிவேற்றம் செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் தனித்தனியாக பதிவேற்றம் செய்யும் நம் கோப்புகள்
அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒரு தளத்தில் பதிவேற்றம் செய்வதன்
மூலம் நம் கோப்புகளை அனைத்து தளங்களுக்கும் அனுப்ப முடியும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://flashmirrors.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1 -ல் காட்டியபடி இருக்கும் Short Description
என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்புகள் பற்றிய
சிறு குறிப்பு கொடுத்துவிட்டு Browse என்ற பொத்தானை அழுத்தி
பதிவேற்றம் செய்யும் கோப்பினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Enter email என்ற வார்த்தையை சொடுக்கியதும் ஒரு
கட்டம் வரும் அதற்குள் நம் இமெயில் முகவரியை கொடுக்கவும்
எல்லாம் கொடுத்து முடித்த பின் Upload என்ற பொத்தானை அழுத்தி
நம் கோப்பை பதிவேற்றம் செய்யவும். நாம் பதிவேற்றம் செய்யும்
இந்த கோப்பு RapidShare , HotFile , DepositFiles, FileFactory,
MegaUpload, Uploading , FileShare , FreakShare ,Uploaded.to,
TurboUpload , UploadBox , ExtaBit, EnterUpload ,uGotFile
போன்ற அனைத்து தளங்களுக்கும் பதிவேற்றம் செய்யப்பட்டு
தரவிரக்க முகவரி நமக்கு இமெயிலில் அனுப்பப்பட்டிருக்கும்.
நம் இணையதள வாசிகளுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
புத்திசாலிகளும், தன்மானம் கொண்டவர்களும் யாருக்கும்
அடிபணிந்து வேலை செய்வது கிடையாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.செயற்கை காந்தத்தை முதன் முதலில் உருவாக்கியவர் யார் ?
2.உலகிம் மிகத்துல்லியமான கடிகாரம் எது ?
3.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தை உருவாக்கியவர் யார் ?
4.முதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் என்ன ?
5. இயற்கை வைத்தியம் என்ற நூலை எழுதியவர் யார் ?
6.சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியவர்
யார்?
7.சர்வதேச நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது ?
8.இரயில் போக்குவரத்து இல்லாத நாடு எது ?
9.மனித உரிமைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது ?
10.மத்திய பிரதேச மாநிலங்களில் பேசப்படும் மொழி எது ?
பதில்கள்:
1.ஜான்கண்டோன், 2.அணுவினால் தயாரான கடிகாரம் ,
3.பியரிடி கோபர்டின்,4.430 மில்லி மீட்டர்,5.மொராஜி தேசாய்,
6.அறிஞர் அண்ணா, 7.ஹேக் , நெதர்லாந்து,
8.ஆப்கானிஸ்தான், 9. 1961 மே 28, 10.இந்தி.
இன்று அக்டோபர் 16
பெயர் : வீரபாண்டிய கட்டபொம்மன் ,
மறைந்ததேதி : அக்டோபர் 16, 1799
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்
போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வரி கட்டாமல்
போருக்கு அழைத்த சிங்கம்.நாட்டு மானத்துக்காக
தன் உயிரை கொடுத்த உத்தமர். உங்களால் நம்
தேசத்துக்கு பெருமை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
நன்றி ...
ReplyDeleteஎனக்கு இது மிகவும் பயனுள்ள தகவல்.
@ Farhath
ReplyDeleteமிக்க நன்றி
thanks winmani
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி