ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, October 15, 2010

ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.

பிரம்மாண்ட ஆங்கிலதிரைப்படங்களை ஆன்லைன் மூலம்
சட்டத்திற்குட்பட்டு பார்க்கவும் எளிதாக தரவிரக்கவும் ஒரு
இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



பிரம்மாண்டத்திற்கும் பொருட் செலவிற்கும் குறைவே இல்லாத
ஆங்கிலத் திரைப்படங்களை நாம் எளிதாக பார்க்கலாம். இலவசமாக
தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.moviemotion.net

ஆக்சன், காமெடி , பிரமிப்பு , த்ரில்லிங்  போன்ற வரிசையில் சிறந்த
ஆங்கிலத்திரைப்படங்கள் அனைத்தையும் நாம் ஒரே இடத்தில்
இருந்து பார்க்கவும் தரவிரக்கவும் இந்தத்தளம் நமக்கு உதவுகிறது.
மற்ற தளங்களைக் காட்டிலும் இந்தத்தளத்தில் நாம் குவாலிட்டி
அதிகமான வகையில் திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம்.
எல்லாத்துறையிலும் சிறந்த படங்களை தேர்ந்த்தெடுத்து ஒவ்வொரு
துறை வாரியாக கொடுத்திருப்பதால் படங்களை தேடும் நேரம்
குறைகிறது. மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் பல
சிறந்த திரைப்படங்கள் இந்ததளத்தில் உள்ளது. ஆங்கிலப்படங்களை
விரும்பி பார்க்கும் நம்மவர்களுக்கு இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.


வின்மணி சிந்தனை
மனமும் செயலும் ஒரே இடத்தில் இருந்தால் நாம் வெற்றி
பெறுவது உறுதி.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.காகித முறையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
2.சிங்கம் மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் ஓடும் ?
3.மனித மூளையின் சராசரி எடை என்ன ?
4.சென்னையில் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
5.ஓட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளது ?
6.அமெரிக்க அதிபரின் காரின் எண் என்ன ?
7.எந்த மயிலுக்கு தோகை இருக்கும் ?
8.இந்தியாவிற்கு சினிமா எந்த ஆண்டு வந்தது ?
9.அனுக்களில் மிகவும் லேசானது எது ?
10.சீனர்களின் அதிர்ஷ்ட எண் என்ன ?
பதில்கள்:
1.சீனர்கள், 2.80 கி.மீ,3.1.4 கிலோ, 4.1931,
5.ஏழு எழும்புகள், 6.100, 7.ஆண் மயிலுக்கு,
8.1851, 9. ஹைட்ரஜன், 10.8.


இன்று அக்டோபர் 15 
பெயர் : அப்துல் கலாம் ,
பிறந்ததேதி : அக்டோபர் 15, 1931
ஒரு சிறந்த விஞ்ஞானியும்  இந்தியாவின்
முன்னாள் குடியரசுத் தலைவரும்,
பொறியியலாளரும் ஆவார்.இந்தியவிண்வெளி
ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில்
முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இளைஞர்களுக்கு
தன்னம்பிக்கையை வளர்க்கும்
ஒரு இந்தியர். உங்களால்
நம் தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. //உங்களால்
    நம் தேசத்துக்கு பெருமை.//

    100% Real

    ReplyDelete
  2. @ Sankar
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. @ TechShankar
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad