நேரம் மற்றும் கடைசியாக மாற்றப்பட்ட தேதி , நேரம் போன்றவற்றை
கொண்டிருக்கும் இதை நாம் எளிதாக மாற்றி அமைக்கலாம் எப்படி
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_3612" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
கோப்பு உருவாக்கிய நேரம் மற்றும் அதை நாம் மாற்றி அமைத்த
நேரம் ( Modify Date ) , இதற்கு முன் திறந்து பார்த்த நேரம்
( Last Access time) போன்ற அனைத்து தகவல்களையும் எளிதாக
மாற்றி அமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.
Download
இந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்கி சொடுக்கியதும்
விரும்பும் கோப்பு உருவாக்கிய தேதி , நேரம் மற்றும் இதற்கு
முன் திறந்து பார்த்த தேதி நேரம் போன்ற அனைத்து தகவல்களையும்
நமக்கு கொடுக்கும் இதில் நமக்கு எந்த கோப்பின் உருவாக்கிய
தகவல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு
டிராக் செய்து படம் 1-ல் உள்ளது போல் இருக்கும் கட்டத்திற்குள்
நகர்த்தியதும் அதை நாம் விரும்பும் தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
விண்டோஸ் -ல் தேதியை மாற்றுவது மிக எளிதாக இருந்தாலும்
நாம் இந்த மென்பொருளை பயன்படுத்த என்ன காரணம் என்றால்
எந்த ரெக்கவரி மென்பொருள் கொண்டும் கோப்பை உருவாக்கிய
தேதி மற்றும் நேரத்தை கண்டுபிடிப்பது சற்று கடினம் அதனால் தான்.
கண்டிப்பாக இந்த மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்யும்
பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
உதவி செய்தபின் அதை பிறர்பார்க்கும் படி சொல்லிக்காட்டுவது
இழிவான செயலாகும் , செய்த நன்றிக்கும் பலன் இருக்காது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆசிய வளர்ச்சி வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
2.காந்திஜி சுய சரிதை எந்த மொழியில் இயற்றினார் ?
3.உலக சமாதானத்தின் காவலன் என்று எந்த அமைப்பை
அழைக்கின்றனர் ?
4.கால்கள் இருந்தும் நடக்க முடியாத பறவை எது ?
5.கரையான் அரிக்க முடியாத மரம் எது ?
6.பச்சைத்தங்கம் என்று எதை வர்ணிக்கின்றனர் ?
7.குருநானக்கிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யார் ?
8.நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது ?
9.இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது ?
10.புத்தர் பிறந்த இடம் எது ?
பதில்கள்:
1.1966, 2.ஆங்கிலம்,3.ஐ.நா.சபை, 4. ரீங்காரப்பறவை,
5.தேக்கு, 6.பசுமைக்காடுகள், 7.கபீர்தாசர்,
8.மேற்குவங்காளம், 9.எல்லோரா, 10.லூம்பினி.
இன்று அக்டோபர் 12
பெயர் : ச. வையாபுரிப்பிள்ளை,
பிறந்ததேதி : அக்டோபர் 12, 1891
இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ்
ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.தமிழ் நூற்பதிப்புத்
துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர்.
தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக
கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி
ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்
கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என
பல்முக பரிமாணங்களைக் கொண்டவர்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
மிக பயனுள்ள தகவல் .
ReplyDeleteநன்றி ..
@ muthuvel
ReplyDeleteமிக்க நன்றி
இன்று அப்துல் கலாம் அவர்களுக்கும் பிறந்தநாள்.
ReplyDeleteநன்றி.
@ Shaik Sujibar
ReplyDeleteநன்றி
Thanks
ReplyDelete@ Manoj
ReplyDeleteநன்றி