ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, October 11, 2010

ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது
அழகாக இருப்பதை தான் இதற்காக பயன்படுத்தும் அழகு சாதன
பொருட்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டு ஒரு
இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.சருமங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப்பொருட்களை
கவனமாகத்தான் கையாள வேண்டும் சில நேரங்களில் நமக்கு
ஒவ்வாத அழகு சாதனப் பொருட்களைப்பயன்படுத்தினால் அதனால்
ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும். இந்தப்பிரச்சினைகளை
தீர்ப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.cosmeticsdatabase.comமக்கள் அதிகமாகப்பயன்படுத்தும் சர்மத்தை அழகுப்படுத்தும் அழகு
சாதனப் பொருட்களின் தகவல்கள் அனைத்தும் கொண்டுள்ள
தகவல் பெட்டகமாகவே இந்தத்தளம் உள்ளது. மேக்கப்-ல் இருந்து
நகப்பாளிஷ் செய்வது வரை அனைத்து பொருட்களின் தகவல்களும்
இங்கு உள்ளது. அதிகமாக எந்த நிறுவனத்தின் பொருட்களை மக்கள்
அதிகமாகப்பயன்படுத்துகின்றனர். இதுவரை அந்தப் மேக்கப்
பொருட்களை மக்கள் பயன்படுத்திய பின் ஏற்படும் மாற்றங்களையும்
இந்தத்தளம் பதிவு செய்கிறது. கூடவே குறிப்பிட்ட மேக்கப்
பொருட்களைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும்
அழகாக பட்டியலிடுகிறது. குழந்தைகளுக்கும் நாம் பயன்படுத்தும்
பேபி சோப் முதல் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
முகத்தை அழகுபடுத்த , கண்களின் புருவங்களை அழகுபடுத்த ,
நகத்தை அழகுபடுத்த குழந்தைகளின் முகத்தை அழகுபடுத்த என
அனைத்து துறை  தகவல்களையும் கொண்டுள்ளது. அழகுசாதனப்
பொருட்களின் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ள விரும்பும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
முட்டாள்களிடத்திலும் சிரிக்காதவனிடத்திலும் நாம்
பழகுவதை நிறுத்த வேண்டும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரம் எது ?
2.இந்தியாவின் முதல் பொது மருத்துவமனை எது ?
3.நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி எது ?
4.பாராளுமன்றத்தையே சந்திக்காத இந்தியப்பிரதமர் யார் ?
5.ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள
இடம் எது ?
6.இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
7.மவுண்ட் குக்சிகரம் எந்த நாட்டில் உள்ளது ?
8.வெட்டுக்கிளியின் ரத்தம் நிறம் என்ன ?
9.போ(po) என்ற நதி எந்த நாட்டில் ஓடுகிறது ?
10.மகாபாரதத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் என்ன ?
பதில்கள்:
1.நந்தாதேவி, 2.சென்னை பொது மருத்துவமனை,3.குற்றாலம்,
4. சரண்சிங், 5.கொடைக்கானல், 6.புலி, 7.நியூசிலாந்து,
8.வெள்ளை, 9.இத்தாலி, 10.ஜெயா.

இன்று அக்டோபர் 11 
பெயர் : வேதநாயகம் பிள்ளை,
பிறந்ததேதி : அக்டோபர் 11, 1826
ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்.இவர்
1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்
என்னும் புதினம்(நாவல்)தமிழில் வெளியான
முதல் புதினம். 1876-1888 ஆண்டுகளில்
தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது
சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad