நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, October 13, 2010

நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம்.

நம் வலைப்பூவை பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களை அந்தந்த நாட்டு
கொடியுடன் எத்தனை பேர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்
என்பதை எளிதாக காட்டலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_3624" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

நம் வலைப்பூவை தற்போது எந்தெந்த நாட்டில் எத்தனை பேர் பார்த்து
கொண்டு இருக்கின்றனர் என்ற தகவலை அந்த நாட்டு கொடியுடன்
காட்டுவது எப்படி என்பது பற்றி கனடாவில் இருந்து நண்பர் மிதுன்
என்பவர் கேட்டு இருந்தார் அவருக்காக மட்டுமின்றி நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் நம் வலைப்பூவை எத்தனை வாசகர்கள் பார்த்து
கொண்டு இருக்கின்றனர் என்பதை கொடியுடன் காட்டலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

[caption id="attachment_3625" align="aligncenter" width="405" caption="படம் 2"][/caption]

இணையதள முகவரி : http://www.flagcounter.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எத்தனை நாட்டு
கொடிகள் காண்பிக்க வேண்டுமோ அதற்கு Maximum Flags to Show
என்பதில் எண்ணிக்கையில் கொடுக்கவும் உதாரனமாக நாம்
12 நாட்டு கொடிகளை காட்டவும் என்று கொடுத்துள்ளோம் அடுத்து
எத்தனை காலம் வேண்டும் என்பதற்கு Columns of Flags என்பதில்
கொடுக்கவும் உதாரணமாக நாம் 2 காலமாக பிரித்து
கொடுத்துள்ளோம். Flag Map -ல் வேண்டுமென்றால் Flag Map என்பதை
தேர்ந்தெடுத்துக்கொளவும் அடுத்து எந்த வண்ணம் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு Get Your Flag Counter என்ற
பொத்தானை சொடுக்கவும்.

[caption id="attachment_3626" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

அடுத்து வரும் திரை படம்  3-ல் காட்டப்படுள்ளது இதில் இருப்பது
போல் காட்டப்பட்டு இருக்கும் கோடிங் -ஐ காப்பி செய்து நம் தளத்தில்
கொடுக்கவும் இனி எத்தனை பேர் எந்தெந்த நாட்டில் இருந்து
கொண்டு உங்கள் தளத்தை பார்த்து கொண்டு இருக்கின்றனர்
என்ற தகவல் தெரியவரும். கண்டிப்பாக வலைப்பதிவர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
தரமான பொருட்களையும் , தரமான சேவையையும்
கொடுப்பவர்களுக்கு மனிதர்கள் மத்தியில் எப்போதும்
நல்ல பெயர் இருக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சுற்றுப்புறச் சூழலில் 21 சதவீதம் எதனால் ஆனது ?
2.இந்திய பத்திரிகைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
3.ஹைத்ரோ விமான நிலையம் எங்குள்ளது ? 
4.மறைந்த நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
5.ஆட்டோவை அதிக அளவில் தயாரிக்கும் நாடு எது ?
6.அரேபிய தீபகற்பத்தில் மிகச்சிறிய நாடு எது ?
7.உலகின் மிக நீளமான ஆறு எது ?
8.இரும்பில் இருந்து எஃகை உருவாக்கியவர் யார் ?
9.இந்தியாவில் எலிக்கோவில் எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.பெண்ட்கோனியன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது ?
பதில்கள்:
1.ஆக்சிஜன், 2.1951,3.லண்டன், 4.பீஜிங்,
5.ஜப்பான், 6.பஹரைன், 7.நைல் நதி,
8. ஹன்றி பெர்னிபர், 9. ராஜஸ்தான், 10.அர்ஜெண்டினா.


இன்று அக்டோபர் 13 
பெயர் : இயன் தோப்,
பிறந்ததேதி : அக்டோபர் 13, 1982
ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்த முன்னாள்
நீச்சல் வீரர். நீச்சல் வரலாற்றில் freestyle
வகை
நீச்சலில் மிகச் சிறந்த வீரர்களில்
ஒருவராகக்
கருதப்படுகிறார்.ஐந்து ஒலிம்பிக்
தங்கப்
பதக்கங்களைப் பெற்றவர். தனது 24 ஆவது வயதில்
நவம்பர் 21, 2006 அன்று நீச்சலுலகில்
இருந்து ஓய்வு
பெறுவதாக அறிவித்தார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. பூங்கோதைOctober 14, 2010 at 9:48 AM

  பயனுள்ள பதிவு நன்றி வின்மணி

  ReplyDelete
 2. thank u very much.

  ReplyDelete
 3. @ பூங்கோதை
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ மிதுன்
  நன்றி

  ReplyDelete
 5. @ Freecomputertips
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad