இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx
41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான
கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம்
பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மனசாட்சிக்கு விரோதம் செய்யாமல், அடுத்தவரை
ஏமாற்றாமல் இருக்கும் நம் வாழ்வில் துன்பம் ஒரு போதும்
வருவதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே பழமை வாய்ந்த மலைத்தொடர் எது ?
2.பூவாத தாவரம் எது ?
3.பாம்புகள் எந்த இனத்தை சார்ந்தவை ?
4.எந்த நாடு மிகப்பெரிய இரானுவத்தை கொண்டிருக்கிறது ?
5.இந்தியாவின் தரைவிட்டு பாயும் விண்கலம் எது ?
6.குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது ?
7.வேகவதி என்ற பெயர் கொண்ட நதி எது ?
8.'மை ட்ரூத் ' என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
9.நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில் உள்ளது?
10.பாத்திரங்களுக்கு ஈயம் பூசப்பயன்படுவது எது ?
பதில்கள்:
1.ஆரவல்லி, 2.நாய்குடை , பாசி, 3.பல்லி இனம்,
4.சீனா,5.பிருத்வி, 6.அமோனியா, 7.வைகை,
8.இந்திராகாந்தி, 9.பெல்ஜியம், 10.வெள்ளீயம்.
இன்று அக்டோபர் 21
பெயர் : ஆல்பிரட் நோபல் ,
பிறந்ததேதி : அக்டோபர் 21, 1833
நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு
அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக்
கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு
வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர்,
ஆயுதத்தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். தன்னுடைய உயிலின்
மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபல் பரிசை
நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)
என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
9.நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் எந்த நாட்டில்
ReplyDeleteஉள்ளது?
9.பிரேசில்
இது தவறான பதில்
உண்மையான பதில் ப்ருச்செல்ஸ்
@ சுல்தான்
ReplyDeleteநண்பருக்கு , நம்மிடம் இருக்கும் தகவலின் படி பிரேசில் என்று தான் இருக்கிறது.
சிரமம் பார்க்காமல் மறுபடியும் ஒரு முறை பாருங்கள். கண்டிப்பாக
திருத்திக்கொள்ளலாம்.
மிக்க நன்றி
very useful information winmani thanks
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
நேட்டோ நாடுகளின் தலமைச்செயலகம் பெல்ஜியம் நாட்டில் உள்ளது. ஊரின் பெயர் ப்ருச்செல்ஸ்
ReplyDeleteHi,
ReplyDeleteReally it useful information, But how to receive fax without fax machine.
@ Sankar
ReplyDeleteநண்பருக்கு திருத்திக்கொள்கிறோம்.
மிக்க நன்றி
@ viswa
ReplyDeleteமிக்க நன்றி