விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, October 22, 2010

விக்கிப்பீடியா கட்டுரையை எளிய ஆங்கிலத்தில் படிக்க ட்ரிக்ஸ்

அனைத்து தகவல்களின் களஞ்சியம் என்று அழைக்கப்படும்
விக்கிப்பீடியாவின்(Wikipedia) கட்டுரைகளை இனி நிமிடத்தில்
எளிய ஆங்கிலத்தில் மாற்றி படிக்கலாம் இதைப் பற்றித்தான்
இந்தப்பதிவு.ஆங்கிலம் கற்பவர்களுக்கும் ( learn english ) ஆங்கில கட்டுரை
எழுத நினைப்பவர்களுக்கும் உடனடியாக தகவல்களை தெரிந்து
கொள்ள செல்வது விக்கிப்பீடியாவுக்கு தான் அந்த அளவிற்கு
விக்கிப்பீடியா பல தரப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாகவே
இருக்கிறது. ஆனால் இதில் இருக்கும் சில கட்டுரைகள் மற்றும்
தகவல்கள் ஆங்கிலத்தில் வல்லுனர்களாக இருந்தால் தான்
படிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தப்பிரச்சினையை
தீர்த்து நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://againbutslower.com

இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த கட்டுரை படிக்க வேண்டுமோ
அந்த கட்டுரையின் பெயரை கொடுக்கலாம் அல்லது விக்கிப்பீடியாவின்
எந்த கட்டுரை வேண்டுமோ அந்த கட்டுரையை தேடி பின் அதன்
இணையதள முகவரியை காப்பி செய்து  Enter a Wikipedia article name
or URL to check for a simpler one: என்று இருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து Again, but slower என்று இருக்கும் பொத்தானை அழுத்தவும்
இப்போது நமக்கு இணையதளத்தின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவின்
Original article -ம் வலது பக்கத்தில் எளிதாக மாற்றி Simple article -ஆக
கொடுக்கப்பட்டிருக்கும்.  விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையை
எளிய ஆங்கிலத்தில் படிக்க விரும்பும் நபர்களுக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
பிறரை ஒரு போதும் ஏளனமாக எண்ணக்கூடாது ,
இறைவனின் படைப்பில் அனைவரும் சமமானவர்களே.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் 6 பேர் பயணித்த விண்கலம் எது ?
2.தாவரங்களில் பெரும்பாலும் எந்த வைட்டமின் காணப்படுவது
இல்லை ?
3.இந்தியாவில் மாங்கனீசு கிடைக்கும் இடம் எது ?
4.புகார் துறைமுகத்தை உருவாக்கிய மன்னன் யார் ?
5.முதல் பெண் இந்திய விமான பைலட் யார் ?
6.இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
7.வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளில் பெரியது எது ?
8.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ?
9.வானிலை ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்தவர் யார் ?
10.தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை பாலிஷ் செய்ய உதவும்
திரவம் எது ?
பதில்கள்:
1.கொலம்பியா, 2.வைட்டமின் B12, 3.மத்தியப்பிரதேசம்,
4.கரிகாலன்,5.துர்கா பானர்ஜி, 6.பீட்டர் கோல்ட் - 1948,
7.ப்ரோடிட்,  8.வைரம், 9.வில்லியம் பெட்ரி 10.டர்பன்டைன்.


இன்று அக்டோபர் 22 
பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் ,
பிறந்த தேதி : அக்டோபர் 22, 1828

வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி.
1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி
இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக்
கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக்
கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி
பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி
ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

14 comments:

 1. மிக பயனுள்ள தகவல்! நன்றி!

  ReplyDelete
 2. ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழில் மொழி
  பெயர்ப்பு செய்யும் மென்பொருள் பற்றிய பதிவு விண்மணியிடமிருந்து கண்டிப்பாக எதிர்பார்கிறேன்.

  அல்லது தாங்களே அதுபோல் மென்பொருள்
  என்னை போன்ற அதிகம் படிக்காத ஆங்கிலம்
  தெரியாதவர்களுகாகாக உருவாக்கம் செய்யலாமே

  செய்வீர்களா நண்பரே ????

  ReplyDelete
 3. @ Tamilfa
  மிக்க நன்றி

  ReplyDelete
 4. @ எஸ். கே
  மிக்க நன்றி

  ReplyDelete
 5. @ shareef
  கண்டிப்பாக நண்பருக்கு நம்மால் ஆன உதவி செய்கிறோம். விரைவில் தெரியப்படுத்துகிறோம்,
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. பேசாமல் சிம்பிள் விக்கிபீடியாவில் தேடித் பார்க்கலாமே? பெரும்பாலான கட்டுரைகளுக்கு அங்கே எளிய மொழியாக்கம் உள்ளது.

  ReplyDelete
 7. @ Abarajithan
  சிம்பிள் விக்கியை விட இந்த தளத்தில் நன்றாக இருக்கிறது , முயற்சித்து பாருங்கள்.
  நன்றி

  ReplyDelete
 8. //சிம்பிள் விக்கியை விட இந்த தளத்தில் நன்றாக இருக்கிறது , முயற்சித்து பாருங்கள்.//

  சிம்பிள் விக்கி தளத்தில் உள்ளதைத்தான் இந்த தளத்தில் embed செய்திருக்கிறார்கள்...

  ReplyDelete
 9. @ feroz
  மிக்க நன்றி

  ReplyDelete
 10. @ Vasu
  மிக்க நன்றி

  ReplyDelete
 11. mouse over English to tamil Dictionary யை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை நீங்கள் இப்படியான ஒரு அகராதியை உருவாகினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 12. @ alavoudine
  காலமும் நேரமும் கிடைத்தால் விரைவில் உருவாக்கி கொடுக்கிறோம்.
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad